திருமணம் வெகுவிமர்சையாக அரங்கேறிக்கொண்டிருக்கின்றது. சிறுசுகள் தம்முள்சூழ்ந்துகொண்டு ஆரவாரம் செய்துகொண்டிருக்கின்றார்கள். பலூனிலோ பம்பாய்முட்டையிலோ (இனிப்பு) அவர்கள் கவர்ந்திழுக்கப்படவில்லை. புதுமணப்பெண்ணைச் சுற்றி அவர்கள் உட்கார முன்வரவில்லை. ஆராவாரங்கள் எல்லாமே ஓர் தாய் விட்டுச்சென்ற கைத்தொலைபேசியில் உள்ள கேமுக்காகத்தான் இருந்தது அப்போதுதங்கே.
பெரிசுகளை நோக்கி என் கண் திசைதிரும்பத்தொடங்கிற்று. தன் குழந்தை ஜ எம் மோ வில் பேசிய கதைகளும் பேரக்குழந்தைகளின் வீடியோக்களுமென அங்கு வாய்நிறைய நவீனகோலக்கதைகள் சாப்பிட்டுக்கொண்டே சொல்லப்படுகின்றது.
நவீனமோகம் நம்முள் இணைந்தவிதம் நோக்கி என்மனசு அலாவ என்னையொத்த உறவுகளுடன் உட்கார எத்தணிக்கிறேன் . அவர்கள் செல்பியெடுக்க என்னையழப்பது என் செவிவழியே நத்தைச்சுருளால் போய்ச்சேர்ந்துகொண்டிருக்கின்றது.
கருத்துகள்
கருத்துரையிடுக