ஜீலைபிப் (ரழி) அவர்களின் வரலாறு சொல்லும் பாடம்

மனித தோற்றத்தை பார்த்து மனிதர்களுடன் உறவாடாதீர்கள். ஜீலைபீப் ரழி அவர்கள் அலங்கோலமான ஒரு மனிதர். ரொம்ப அலங்கோலமானவர் என ஹதீஸில் வருகின்றது ஆனால் எப்படி என்று குறிப்பிடப்படவில்லை.

சில மனிதர்கள் அலங்கோலமானவர்களுடன் உறவு வைக்க மாட்டார்கள். ஏழைகளோடு, பலவீனமானவர்களோடே உறவு வைக்க மறுக்கும் இந்நவீன யுகத்தில் இது ஒன்றும் பெரிதல்லையே( அல்லாஹ் பாதுகாத்தவர்களை தவிர).

சில மனிதர்களின் கையில் குஷ்டம் இருக்கும் எனவே யாரும் அவர்களுடன் கைகுலுக்க மாட்டார்கள். சில மனிதர்களின் கால் யானைக்காலாக இருக்கும் இதனால் யாரும் அவர்களுடன் இருந்து பேசமாட்டார்கள்.  சொந்த உறவு பந்தம் கூட (னல்லாஹ் பாதுகாத்தவர்களை தவிர) இதை செய்கின்றது. மனித தோற்றத்தை பார்த்து மனிதர்களுடன் பழகுவார்கள்.

இன்று ஸலாம் கூட யாருக்கு சொல்லப்படுகின்றது நன்றாக தெரிந்தவர்கள், புகழ்பெற்றவர்கள், பெரிய செல்வந்தர், ஆல்பலம், பணபலம் படைத்தவர்களை பார்த்து தான் சொல்லப்படுகின்றது.

நபி (ஸல்) அவர்கள்  எப்படி முன்மாதிரி பாருங்கள். ஜீலைபிப் ரழி அவர்களை பார்த்து எப்படி ஜீலைபிப் என கேட்கிறார்கள்? ஜீலைபிப் அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ் எனக்கு மறுமையில் ஹூருல்ஈன்கள் வைத்திருப்பான் தானே என்கிறார்கள். காரணம் அவர் அலங்கோலமானவர் என்பதால் இந்த உலகில் அவருக்கு யாரும் பெண் கொடுக்கவில்லை. கொடுக்க முன்வரவும் இல்லை.

இந்த உலகில் ஒரு மனிதன் எவ்வளவு அலங்கோலமானவனாக இருக்கலாம் ஆனால் நமக்கு உள்ள உள்ளம் போல தானே அவன் உள்ளமும் , நம் உடம்பில் ஓடம் அதே இரத்தம் தானே அவன் உடம்பிலும் ஓடுகிறது.

ஓர் சாதாரண இளைஞர்களுக்கு உள்ள ஆசைதான் திருமணம், பெண், அதே ஆசைதான் அவருக்கும். எல்லாரும் கைநழுவி விட்டார்கள். உங்களுக்கு என்னப்பா கலியாணம்,உங்களுக்கு அதெல்லாம் நடக்காது என்று கூறினார்கள்.

சாதாரண மனித இயல்பு தானே அது. நாம் அப்படிப்பட்ட அலங்கோலமானவர்களுக்கு நம் மகளை திருமணம் முடித்து கொடுப்போமா. ஹூருல்ஈன்கள் மறுமையில் கிடைக்கும் என்று கூறியபோது ஜீலைபிபே இல்லை உங்களுக்கு இந்த உலகிலும் உண்டு மறுமையிலும் உண்டு என்றார்கள். நபி சொன்னால் அது வஹியாகத்தான் இருக்கும். அது நடக்கும் இல்லையெனில் அவர் நபியா இல்லையா என சந்தேகம் வந்து விடும்.

யாருமே திருமணம் முடிக்க மாட்டார்கள் என்று கூறியவருக்கு , அலங்கோலமான மனிதர் என்று ஹதீஸில் வருகின்றது. இவருக்கு எங்கே போய் பெண் பார்ப்பது? யார் பெண் தருவார்கள்? இன்று கொஞ்சம் கறுப்பாக இருந்தாலே பெண் கொடுக்க மறுத்து விடுகிறார்கள்.

தற்போது நம்மிடம் உள்ள மிகப்பெரிய பிரச்சனை சீதனம். 40 வயதாகி இன்னும் திருமணம் முடிக்காமல் இருக்கும் கன்னிக்குமரிகள் உள்ளனர். அவர்களுக்கு என்ன ஆசை இல்லையா? அவர்களுக்கு என்ன இளமை இல்லையா? காரணம் சீதனம் கொடுக்க வசதி இல்லை. கேட்பவனும் இந்த உம்மதைச்சேர்ந்தவன் தான். எல்லாம் இருந்தும் இப்படி இல்லை என ஏங்கும் இந்த காலத்தில் இப்படி என்றால் நபி ஸல் அவர்களின் காலத்தில் முஃமீன்கள் சொற்பமானவர்கள்.அதுக்குள் உள்ளவர்களைத்தான் திருமணம் முடிக்க முடியும். அந்த கொஞ்ச பேரிலும் இவரை ஏற்க ஒரு பெண் வரவேண்டும் அல்லவா?

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் எல்லையில் ஓர் வீட்டை காட்டி அங்கு போய் பெண் கேளுங்கள் என்றார்கள். அவரும் எனக்கா என்கிற ஆசையில் அங்கு போய் நபி அவர்கள் அனுப்பினார்கள். பெண் கேட்கச் சொன்னார்கள் என்றதும் அந்த வீட்டுக்குரியவர் நபிக்கா? எனக் கேட்க இல்லை எனக்கு என்கிறார் ஜீலைபிப் உங்களுக்கு எனது மகள் ஒத்துவரமாட்டாள் என மறுத்து விடுகிறார். ஜீலைபிப் நபி ஸல் அவர்களிடம் போய் நடந்ததை சொன்னார்கள்.

நபி ஸல் அவர்களே அங்கு போனார்கள் பெண் கேட்டார்கள் அவரும் உங்களுக்கா? அல்ஹம்துலில்லாஹ் என்றார். உடனே நபி ஸல் அவர்கள் தப்பாக நினைக்கவேண்டாம் பெண் கேட்டது எனக்கல்ல ஜீலைபிப்க்கு என்றார்கள்.

அல்லாஹ்வின் துதரே மனைவி உடன் கொஞ்சம் ஆலோசனை செய்ய வேண்டும் எனக்கேட்டாரகள்? ஒரு தந்தைக்கு நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டால் மனைவியை நோக்கி தானே செல்வார்கள். இருவரும் அவள்இதை ஏற்பாலா எத்துனை மாப்பிள்ளையை மறுத்த அவள் இதை எப்படி என பேசிக்கொண்டு இருக்கும் போது இதை எல்லாம் கேட்டு இருந்த அந்த பெண் வருகிறாள். வந்து பெற்றோரிடம் கேட்கிறாள் நபி ஸல் அவர்கள் ஜீலைபிபிற்கு என்னை பெண் கேட்டு வந்துள்ளார்கள். அவரின் கோரிக்கையை உங்களால் மறுக்க முடியுமா? கேட்பது ரஸூலுல்லாஹ் ஜீலைபிபை நான் திருமணம் முடிக்கின்றேன் என்றால் அந்த யுவதி. அதுதான் சகோதரர்களே ஈமானின் சுவை. எதுவும் அல்லாஹ்வுக்காக, ரஸுலுல்லாஹ்வுக்காக என்று இருக்க வேண்டும்.

இன்று எத்துனை முஸ்லிம் யுவதிகள் அன்னியவர்களுடன் ஓடிச்செல்வதை பார்கிறோம். காதலித்ததால் அவர்கள் தான் வேணும் என்பதற்காக 25 வருட கஷ்டத்தில் வளர்த்த தாயை, தந்தையை தூக்கி எறிவதை பார்க்கலாம். அவர்களுக்கு இது ஒரு படிப்பினையாகும் நபிக்காக ஈமானிய சுவையை அடைய அலங்கோலமான மனிதரை அந்த யுவதி திருமணம் செய்து கொண்டால்.

உலகமே கைவிரித்த போது எனக்கா இவள் என்று அடைந்த அந்தப் பெண்னை ஜீலைபிப் எப்படி மகா ராணியாகவல்லாக பார்த்து இருப்பார்கள். யாரும் ஒரு மனிதன் தோற்றத்தை வைத்து இடைபோடக்கூடாது தோழர்களே.

நபி ஸல் அவர்கள் எவ்வளவு பெரிய மனிதர் அவர் அந்த மனிதருக்கு பெண் கேட்டுச்சென்றுள்ளார்கள். அந்த அலங்கோலமான மனிதரை ஈமானிய சுவையை அடைய நபிக்கா ஏற்றுக் கொண்ட பெண் நமக்கு முன்மாதிரி அல்லவா.

சுவர்கத்தின் சுவண்டிகளே அலங்கோலமான மனிதர் என்ற அடையாளத்தை தாண்டி மனித உணர்வு என்கின்ற கோட்பாட்டில் அனுசரிக்கும் போது சாதாரண மனிதர்கள் ஆகிய நாம் நமது நிலமை சற்று சிந்திக்க வேண்டும் தோழர்களே!

இறுதியாக எதையும் யாரையும் எடைபார்த்து செய்வதை விட அல்லாஹ்வுக்காக அவனது தூதருக்காக என்கிற உணர்வோடு செயற்படும் போது நிச்சயம் "حلاوة الإيمان " ஈமானின் சுவையை அடைந்து கொள்ள முடியும். அதற்கு இறைவன் நமக்கு அருள் புரிவானாக !

ஆதில் ஹசன் அவர்களின் உரையின் சிறு பகுதியில் இருந்து

H.M.ஹாஸிர்

(ஸலபி)

வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்