முதல் வருட முடிவில் நாமின்று….

தாய் மடி துயில் கலைத்து
பல்கலையில் தலை சாய்த்தோம் அன்று….
காலம் செய்த கோலமதில்
காற்றாய் சுழன்றது ஒரு வருடம்….

சொர்க்கமாய் எண்ணிய விடுதியை
சோகமாய்ப் பிரியும் தருணமிது….
தோளோடு தோள் நின்று
தோழிகளுடன் நடை பயின்ற மண்ணிது….

கம்படி பட்ட மாமரங்கள்
கம்பீரமிழந்து நிற்கின்றன
எம் பிரிவை எண்ணியே….
குளிர் தென்றல் வீச
கும்பலாய் நின்று
இளைப்பாறிய விடுதி வேப்பமரங்கள்
இனி வரமாட்டியோ???? என்கின்றன….

தோட்டம் முழுதும் திரிந்து
தோகை விரித்த மயில்கள்
அந்த விடுதியில் சந்திப்போம்
அது வரை பொறுத்திரு என்கின்றன….

அந்திப் பசி போக்கிட
"சோட்டீஸ் தாங்கோ" என்ற கோரஸுடன்
ஈக்களாய் மொய்த்த
ரபீக் கெண்டீனின் நினைவுகள்….

தீப்பெட்டியாய் சிறு அறையெனினும்
தீராத ஆசை அதன் மேலே….
ஆராத காயங்களுடன்
அரண்மனையைப் பிரியப் போகிறோம்
சின்னாட்களிலே….

பல்கலையின் பாலகர்களாய்
பவனி வந்த நாம்
'ஜுனியர்' பட்டம் பறிக்கப்பட்டு
'ஸீனியர்' ஆகப் போகிறோம்….

இதுபோன்ற இதமான தருணங்கள்
இன்னும் ஏராளம் தாராளம்….
இனி அழுதாலும் வராது
இனிமையான அந்நாட்கள்…..
வரப்போகும் காலங்கள்
வளமாய் அமைந்திட
வல்லோனைத் துதித்திடுவோம்….
இன்ஷா அல்லாஹ்….

 

BINTH ANEES
SEUSL
1ST YEAR
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

 

 

கருத்துகள்