ஒரு பெண்ணின் கரம் பிடித்து குடும்ப வாழ்வை ஆரம்பித்து விட்டால் அவளுக்கும் குழந்தைகளுக்கும் முழுப்பொறுப்பும் உங்கள் மீதானதுதான் (உணவு, உடை, மருந்து, வீட்டு செலவு) மறக்க வேண்டாம் அதில் உங்களுக்கு பரகத் உள்ளது.
அண்ணன் தம்பி அப்பாவாக இருப்பதால் எண்ணவோ அவர்களுக்கு கஷ்டம் இல்லை என்று எண்ணிவிடவேண்டாம். நீங்கள் வியர்வை சிந்தி உழைப்பதை பிறர் அனுபவித்தால் புரியும் அதன் அருமை.
அவர்கள் எண்ணவோ மனதநேயத்தாலும் தம் இரத்த பந்தம் எனபதாலும் அதை பொருட்படுத்தாமல் இருக்கலாம் ஆனால் அவன் ஏழையோ பணக்காரணோ நீங்கள் மனசாட்சியுடன் நடக்கலாமே.
இஸ்லாம் எதிர்பார்க்கும் குடும்ப வாழ்வே நிச்சயம் வெற்றி தரும் மறக்க வேண்டாம். உங்கள் உழைப்பை சேமிக்க பிறர் உழைப்பை செலவழிக்க நினைப்பது நியாயம்தானா! சிந்தியுங்கள் நீங்கள் இறைவனிடத்தில் இதற்கும் பதிலளிக்க வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக