நோயுற்ற ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யாவும் வியந்து போன வைத்தியரும்.

இப்னு கையிம் அல்ஜௌஸிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தமது ரௌழதுல் முஹிப்பீன் வநுஸ்ஹதுல் முஷ்தாகீன் என்ற நூலின் 70 ஆவது பக்கத்தில் பதிவு செய்துள்ளார்கள்.

ஒரு சமயம் ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் நோயுற்ற போது அவருக்கு வைத்தியம் பார்க்க வந்த வைத்தியர் அவரிடம் நீங்கள் நூல்களை வாசிப்பதனையும் ஆய்வுகள் செய்வதனையும் நிறுத்த வேண்டும் என்று சொன்ன போது ஷைகுல் இஸ்லாம் அவர்கள் வைத்தியரிடம் கூறினார்கள்: உள்ளத்தின் இயல்பு நிலை சரியாகி மகிழ்ச்சி பொங்கும் இதயங்களுக்கு இலகுவில் குணம் கிடைக்குமல்லவா? என்று கேட்டார்கள், அதற்கு வைத்தியர் ஆம் என்றார், உடனே ஷெய்குல் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் நூல்களை வாசிப்பதும் ஆய்வுகள் செய்வதிலும் தான் என் உள்ளத்திற்கு மகிழ்ச்சியும் அமைதியும் சந்தோஷமும் இருக்கின்றது, அதன் மூலம் தான் என் நோய்க்கு நிவாரணம் கிடைக்கும் என்றார்கள்.

உடனே வைத்தியர் : இது எங்களது வைத்தியத்திற்கு அப்பாற்பட்ட ஒரு விடயமாச்சே என்று (வியப்புடன்) கூறிவிட்டுச் சென்றார்.

முபாரிஸ் இப்னு தாஜுதீன் ரஷாதி.

கருத்துகள்