புத்தகப் பைபினுள் கனவுகளை மட்டும் நிரப்பியபடி ஊசித் தும்பியென பாடசாலை செல்கிறாள் சிறுமி
வானம் வசப்படும் தூரம் வெகு தொலைவில் இல்லையென்று தனது சிறகு நுனியில் நம்பிக்கையினை சுமந்தபடி அலாதியாகச் செல்கிறாள்
வகுப்றையில் சக மாணவர்கள் சலவை செய்து ஐயன் பண்ணப்படா அவளது சீருடையின் கோலத்தை பரிகாசம் செய்து சிரித்தனர்
அக்கணங்களிடை உடைந்து சிதறுகின்றன சிறுமியின் நம்பிக்கையின் சிறகுகள் அழுக்கென்பது சீருடையிலில்லை மாணவர்களது மனதுகளில் படிந்திருக்கிறதென்பதுதான் நிதர்சனம்
கருத்துகள்
கருத்துரையிடுக