சிறு பிரிவில் ஒரு மறு பிறவி

அழகான நினைவுகளால் நீ ஆடை கட்டி விட்டாய் என் இலையுதிர்காலம் வசந்தமானதாக.

நினைவுக் குழந்தையாய் நீ நான் கொஞ்சியபடி நாம் வாழ்ந்த இந்த அறை ஒரு கருவறையாக.

சிதறவிட்ட உன் சிரிப்பில் ஒரு முத்துமாலை கோர்ப்பவளாய் நான் உன்னை அதில் அணிவதற்காக

மலராகப் பூத்தன உன் நினைவுகள் தூக்கலான வாசனை என்னைச் சுற்றி.

நீ காற்றாக வந்து என்னைத் தொடுவதால் நீ இருக்கிறாய் என்னை தழுவிக் கொண்டு தற்போதும் எப்போதும்.

எம்.ரிஸான் ஸெய்ன்

கருத்துகள்