இது பூங்காவனப் பாலை வனம் இங்கு நீங்களும் நாங்களும் நலமாய் வாழலாம் பெறாமை கொண்டு!
இங்கு யோசிப்பதற்கு நேரமில்லை நேரங்களும் அதிகளவு தாகம் எம்மேல் கொண்டதால் மறைந்து விட்டதாம் என்றும் தென்படாது இருக்க!
இங்கு வாழ வேண்டுமாயின் சில தகமைகள் தேவைப்படுகின்றதாம்! அதில் ஒன்று பணத்தாசை பிடித்த பித்தன், உடல் முழுக்க நிறைந்து போன காமம், இரக்கம் இல்லாது அரக்கனாய் இருப்பது என்று தகமைகள்!
இந்த உலகில் மட்டும் வாழ சென்று விடாதீர்கள் நீங்கள் கடைசியாய் காப்பாற்றி வைத்த மனிதன் எனும் பெயரும் தொலைந்து போய்விடக் காரணம் ஆயிடும்!
அதிசய உலகம் என்று அநியாயம் ஆக்கி விடாதீர்கள் வைராக்கியம் பிடித்துப் போன வாழ்க்கையினை!
கருத்துகள்
கருத்துரையிடுக