சுபஹ் தொழுத போது

சுபஹ் தொழுகையை தவறாமல் இமாம் ஜமாஅத்துடன் தொழ வேண்டும் என உறுதிமொழி எடுத்து அதை செயற்படுத்தும்போது எதிர்கொண்ட சவால்களே இவை.

குரல் 1 - நைட் டேட்டா யூஸ் பன்ன எழும்பிட்டு சும்ம சுபஹ்ஹு தொழ எழும்பின மாரி சீன் போட்றயா??

குரல் 2 - ஹெல்லோ! ஹெல்லோ! எங்க போனாய் இங்கினதானே தூங்கி ஈந்தாய்? எங்க???

குரல் 3 - தம்பி அந்த வெளியூர்ல ஈந்து வந்தீக்கிற பொடியன் நீங்களா?

குரல் 4 - என்த்த மஹேன்... எக்ஸேம் வருகுது போல...

குரல் 5 - பொடியன் போர்மாகி... சுபஹுக்கெல்லாம பள்ளிக்கி வந்து சும்மா நெருப்பெடுக்குறான்...

குரல் 6 - எல்லாறும் ஒன்னப் பாத்து ஓ.எல் காலத்துல லவ் பன்னின புள்ளைய திடீரின்டு ரெண்டு புள்ளையோட கண்ட மாரியே ஒரு ரிஅக்ஷன் உட்ராங்களே...

குரல் 7 - இதொன்டு!! நேரத்தோட எழும்பிக்கொண்டு தடமாறுது!

கருத்து - நிறைய பேர் திருந்தாமல் இருப்பதற்கு இது போன்ற விமர்சனங்களும் ஒருவகையில் காரணம்தான். விமர்சனங்களுக்கு பயப்படாதீர்கள். அவர்களால் விமர்சனம் (பலாய்) மட்டுமே செய்ய (கழுவ) முடியும். மாற்றம் நம்மில் இருந்து தொடங்கப்பட வேண்டும்.

Copied & pasted from FB

கருத்துகள்