ஒவ்வொரு நபருக்கும் ஒரு புது அனுபவம் இந்த தேர்தல் காலம்!
பணி புரியும் இடம் பன்சலை என்பதால் புண்ணிய பூமி என்பதால் பாதணிகள் வெளியே!
கடமை முடிய பார்க்கிறாள் பெரும் ஏக்கம் ஏமாற்றம்! வாழ்வில் புது அனுபவம்! அங்குமிங்கும் சக பணியாளர்கள் தேடலில் களமிறங்க நாய்களின் நாசகார வேலை என திட்டவட்டமாக தெளிவாகிறது!
பாதணிகளை கடித்துக் குதறி சப்பி உண்டு இருந்திருக்கிறது வாயில்லா ஜீவன் எனும் அந்த நாய்!! பணியாளர்களில் அவள் மாத்திரமே இஸ்லாமியன் என்பது நாய்களுக்கும் புரிந்திருக்கும்! காரணம் அவள் அணிந்திருந்தது அபாயா!!
பாதங்கள் பாதுகாக்க பாதணிகளோடு சென்றவள் நாய்களது வேலையினால் வெறும் பாதங்களோடு திரும்ப வேண்டிய நிலை! அருகில் கடைகள் இல்லை!! சொல்லி அழும் நிலையுமில்லை! தொலைவிலுள்ள அன்புக் கணவரை தொலைபேசியில் அழைத்து செருப்புடன் வரவழைத்து பத்திரமாக வீடு வந்து சேர்ந்தாள்! நாளை என்ன நிலைமையோ!!!

கருத்துகள்
கருத்துரையிடுக