வெளிச்சத்தின் மூடுபனி

விதை துளிர்கும் வினை வதையில் மிளிர்வதா? சதை கொடுக்கும் அயில் துளை தனில் குதிப்பதா?

மன சரிவு எழும் மாதை அவள் எழில் பாதை அது ஔிர் பேதை ஞானம் ஒழித்து

ராதை அவள் நோவைக் காண உதிரம் மாறு கொள்ளுதே வெண்மைக் குணம் காணுதே வெந்தழல் வீரு கொள்ளுதே

முதுகெழும்பு முறிவு கொள்ளுதே அடி வயிறு கனதி கொள்ளுதே ஆசைகள் முடங்கிக் கொள்ளுதே அவை அனைத்திலும் அவள் மனம் உறுதி கொள்ளுதே!

தொப்புள் கொடி உறவு கொள்ளவே! தோழமை ஓங்கிக் கொள்ளுதே ஆதலால் உயிர் கொடுக்க மனம் தொண்டு கொள்ளுதே

குவைசர் முகைதீன்

கருத்துகள்