மித்ரத்தை பின்தொடர்ந்து இவர்கள் செல்ல அவனும் இடைக்கிடை வாகனத்தில் இருந்து இறங்கி ஏதாவது கட்டிடத்துக்குள் நுழைந்து பின்னர் மறுபடி வந்து ஏறிக்கொள்வதாக இருந்தது. தூர நின்று இவர்களும் இதையெல்லாம் கவனித்து கொண்டே இருந்தனர்.
"என்கிடு காரை விட்டு வெளியே வரல.. போய் கடத்திடுவோமா...?"
என்று கேட்டான் ஆர்தர்.
"உனக்கு மூளை கம்மின்னு அடிக்கடி நிரூபிக்காதே... அடா லூசு இது என்ன ஈராக் இல்ல இத்தலின்னு நினைச்சியா ஹாங்காங்... உன்னை பிடிச்சு பத்து வருஷம் ஜெயிலில் போட்டுடுவாங்க."
என்றாள் மீரா..
"அவ்வ்வ்...."
"ஆ... அவன் வெளியே வரான்.... பாரு..."
என்றாள் மீரா.
"இவன் தனியா வந்திருப்பான்னு நினைக்குறியா?" என்று கேட்டான் கில்கமேஷ்.
"அப்படின்னா....?"
"கண்டிப்பாக இங்கேயும் இவனுடைய ஆட்கள் இருப்பாங்கன்னு தோணுது. நாம ரொம்ப கவனமா இருக்கணும்."
என்றாள் ஜெனி.. அப்போது கார்கதவை திறந்து உள்ளே வந்து ஏறிக்கொண்டு ராபர்ட்.
"வேலை முடிஞ்சது காய்ஸ்..."
மித்ரத் உள்ளே சென்றிருந்த வேளை ராபர்ட் காரைவிட்டு இறங்கி முன்னேறி என்கிடு இருந்த காரில் ஒரு ட்ராக்கிங் டிவைசை ஒட்டி விட்டான். ஒரு டாக்சியில் இவர்கள் மூவரும் மற்றதில் ஆர்தர் மீராவும் இருந்தனர். இந்த டாக்சியில் இவர்கள் பேசுவது எல்லாம் சந்தேக கண்கொண்டு பார்த்த டிரைவரிடம் தாங்கள் பொலிஸ் என்று பொய் கூறி சமாளித்தனர். இப்படியாக மித்ரத்தை ஒவ்வொரு அசைவுகளாக இவர்கள் கண்காணித்து கொண்டே இருந்தனர்.
"இருந்தாலும் எனக்கொரு சந்தேகம் ஜெனி எப்படி என்கிடு இவன் சொல்றத எல்லாத்தையும் நம்பிக்கிட்டு இங்க வந்தான். என்கிடு ஒரு விஷயத்தை செய்றதுக்கு முன்னாடியே ஆயிரம் தடவை யோசிப்பான்."
என்றான் கில்கமேஷ்.
"கண்டிப்பாக ஏதாவது பெரிய பொய்யை சொல்லி அவனை நம்ப வெச்சிருப்பான். அது இருக்கட்டும் பரவாயில்லை. எப்படியும் நமக்கு முன்னாடி மித்ரத் அந்த டாக்டரை கண்டுபிடிக்க தான் போறான்."
என்றாள் ஜெனி, அப்போது மித்ரத்தின் கார் ஒரு பெரிய கட்டிடத்தின் முன்னாடி போய் நின்றது. இவர்களும் தொடர்ந்தனர். இம்முறை என்கிடுவும் காரில் இருந்து இறங்கி கட்டிடத்தில் நுழைந்தான். அவர்களை ஏற்றி வந்த டாக்சியும் புறப்பட்டு விட்டது.
"இப்போ என்ன பண்ணுறது...?"
"நாமளும் இறங்கிடுவோம்."
என்று ஜெனி சொல்ல அவர்கள் மீராவுக்கும் விஷயத்தை சொல்லிவிட்டு ஐவரும் அந்த பெரிய ஹோட்டலுக்குள் நுழைந்தார்கள். உள்ளே சென்ற மித்ரத் மற்றும் என்கிடு எங்கே யாரை பார்க்க எந்த அறையில் இருக்கிறார்கள் என்ற ஒருவிடயமும் தெரியாமல் ஆங்காங்கு தேடி கொண்டிருக்க, கொஞ்ச நேரத்தில் மித்ரத் என்கிடுவோடு இன்னும் ஒரு ஆளுடன் ரிசப்ஷன் பக்கமாக பேசிக்கொண்டே வந்தான். அவர் பார்க்க ப்ரொபெசனல் டாக்டர் போலவே இருந்தார். அவர்கள் பொருத்தி இருந்த காதில் மாட்டும் இயந்திரத்தை ஆன் செய்து ஆளுக்காள் பேசி கொண்டனர்.
"ராபர்ட் கவனி... அந்த ஆளுதான் நாம தேடிவந்த டாக்டரா?"
"இரு எதற்கும் செக் பண்ணுறேன் ."
என்றவன் போனாய் நோண்டிவிட்டு ஜெனிக்கு பதில் கொடுத்தான்.
"காய்ஸ் இவனே தான் இவங்கள விடக்கூடாது. எண்ண பேசுறாங்கன்னு தெரிஞ்சிக்கணும். அதோட எங்க போறாங்கன்னும் தெரியணும்."
என்ரான் கில்கமேஷ்.
"அதுக்கு ஒரு வழி இருக்கு"
என்ற ஆர்தர் உடனே தொப்பியை நன்றாகவே சரித்து விட்டு வேண்டுமென்றே டாக்டரை நெருங்கி அவரின் பெரிய கோர்ட்டில் ஒரு ட்ராக்கின் டிவைஸ் மற்றும் மைக்கை போட்டுவிட்டு நகர்ந்தான். டாக்டரும் மித்ரத்தும் அங்கிருந்து சென்ற பின் இவர்கள் ஒன்று சேர்ந்தனர்.
**********************
"என்கிடுவுக்கு வந்திருக்கிற இந்த வியாதியை சரிபண்ண நாம ஸ்பெஷல் எக்கியுப்மெண்ட் இருக்குற லேப்பிற்கு போகணும் மிஸ்டர் மித்ரத்."
என்கிறார் டாக்டர்.
"கண்டிப்பாக. எவ்வளவு செலவானாலும் பரவால்ல. இவன் இதயத்தை... ஐ மீன் இவன் இதயத்தில் இருக்குற பாய்சனை அகற்றிடனும்."
என்றான் மித்ரத்.
"அப்போ சரி நாம இப்போ அந்த லேபிற்கே போவோம். அங்க பக்கத்தில தான் என்னோட குவாட்டஸ் இருக்கு."
என்றான் டாக்டர். இதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த நமது குழுவினர்..
"இந்த டாக்டரை கன்வீன்ஸ் பண்ண முடியுமா?"
"அவரை தனியா சந்திக்க ஒரு வாய்ப்பு வேணும் "
"சரி இப்போ புறப்படுவோம்."
என்ற ராபர்ட் அடுத்த டாக்சியில் விரைவாக அவர்கள் செல்லும் இடத்துக்கே புறப்பட்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக