பேசும் சுவர்கள் !!

ஆட்சி பீடத்தில் மாற்றம் காட்சிகளும் மிக ஏற்றம் பாழடைந்த சுவர்கள் பலம் சேர்க்கின்றன! பழுதடைந்த சுவர்கள் திருத்தம் பெறட்டும்! பலம் நலம் சேர்க்கட்டும்! படிப்பினைகள் பல வழங்கட்டும்!!

வரைந்த சித்திரத்தில் சுவர்களும் விசித்திரமாக கண்ணைக் கவரும் வர்ணம் கலையும் வளரும் வண்ணம் பல கருத்துக்களின் உள்ளடக்கம் அதிலே வரும் தன்னடக்கம்!!

உள்ளங்களை கிளர்ச்சி செய்யும் உள்ளங்களை வளர்க்கும் உண்மைகளை உரைக்கும் பல ரக ஓவியங்களின் காட்சி பாதை வழியே பயணிக்க ராதை போன்ற மௌனம் ஓவியங்கள் இன்னும் வேண்டும் வன்முறையைக் கண்டிக்கும் ஐக்கியம் ஆனந்தமாய் வளர்க்கும் நன்முறையில் வாழ்ந்தொழுகும் நல்லெண்ணம் வளர்க்கும் நற்பிரஜையாய் வேரூன்றும் நற் கருத்து நல் வித்து இன்னும் ஊற்றாய் ஊரும் எண்ணங்களில்!!

முரட்டு சுபாவம் வேண்டாம் முற்போக்கும் வேண்டாம் பிற்போக்கும் வேண்டாம் கருமை நிறம் வேண்டாம் கடும் போக்கும் வேண்டாம்

நல்ல கதைகள் பல சொல்லும் நாட்டின் பாரம்பரியம் உரைக்கும் வரலாற்றுக் கதைகள் சொல்லும் பாடசாலைப் பாடவிதானம் வீதி ஒழுங்கு பேணும் உதவிப் பெறும் இன்பம் மூத்தோர் கண்ணியம் அறிஞர்கள் ஆளுமைகள் என ஆயிரம் ஆயிரம் சிந்தனைகள்!!

அனைத்துமே புத்தாக்க சிந்தனைகள் அதில் தித்திப்பு மட்டுமே வேண்டும்!! நல்லதை தூவி நல்லதே அறுவடை ஆகட்டும் ஆகட்டும் ஆவலுடன்...!!

எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா SLPS-2 பஸ்யால

கருத்துகள்