வெற்றிடம் நிரப்பப் புறப்படுவோம்

வெற்றுக் கடாதாசியில்கூட வண்ணக் கிறுக்கல்கள் தெரிவது கலைஞனின் கண்களில் தான்..

வெறுமையானும் தனிமையானாலும் வெற்றிடம் தெரிவதில்லையாம் மனக்கண் முன்

சிந்தனையில் சிரிக்கலாம் சில நேரம் அழுவலாம் மந்தக் கிறுக்கனல்ல கற்பனையில் வளம்வருபவன்

ரசனை இருக்கும் - அதை ருசிக்கத் தெரியாத பலரில் - தனி ரசனையிலே மிதப்பவரும் இருப்பர் இவருக்கு அவர் ரசிகராம்

பார்வை கோணலில்லை - இனி போர்வையும் தேவையில்லை - கண் பட்டதேல்லாம் கவிதை தென்பட்டதெல்லாம் கருப்பொருள்

ரசிக்க தேரிந்தால் யாரும் ரசிகராகலாம் ரசனையை வாசிக்கத் தெரிந்தால் நீயும் கவிஞனாகளாம் அதை நேசிக்கத்தெரிந்தால் நானும் கலைஞனாகளாம் அதையே சுவாசிக்க முடிந்தால் நாமெல்லாம் அறிஞனாகலாம்

நானும் நீயும் ஓர் இலக்கியம் படைப்போம் வா உறவே

Asana Akbar Anuradhapura SEU Of Srilanka

கருத்துகள்