குரங்கு மனசு பாகம் 28

'தன் கவலைகளுக்கு முடிவு கிடையாது. தனக்காக சந்தோஷம் இனி வாய்க்காது' என உள்ளம் நொந்துபோன சர்மியின் சிந்தைகள் வேறு திசையில் பயணிக்க, சமையலறை படிக்கட்டில் கிடந்த அந்த நஞ்சுனவை கையில் எடுத்தாள்.

"என்னடி உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா?" மகளின் அழுகைச் சத்தம் கேட்டு தட்டுத் தடுமாறி வந்த தாய் ராபியா, நடக்கப்போன விபரீதம் கண்டு நடுங்கிப்போக,

"ஏன்ட உம்மா.." தாயைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கதறி அழுதாள் சர்மி.

"என்னம்மா? என்ன ஆவின உனக்கு? உம்மாக்கிட்ட பேசு சர்மி."

"எனக்கு ஒன்னும் வேணாம்மா. நான் போயிட்றன். இனி வாழ்ந்து எந்த யூசும் இல்லம்மா."

"ஏன் புள்ள? ஏன் இப்புடி எல்லாம் பேசுற சர்மி? என்ன நடந்திச்சிமா?"

"ஐயோ உம்மா" தாயை இறுகப்பற்றிக் கொண்டு கண்ணீர் பாய்ந்தோட கதறினாள் சர்மி.

"இங்கபாரு சர்மி.. உம்மாவ பாரு. சர்மி என்னடா நடந்த?" வீறிட்டு அழுதவளுக்கு தாயின் இப்போதைய நிலமை நினைவில் மீள, தன் புத்தியற்ற நிலைகுறித்து தடுமாறிப் போனவள், உண்மைகளைச் சொல்லி தாய்க்கு இன்னுமின்னும் வருத்தங்கள் கொடுக்க விரும்பாதவளாய் கலங்கியிருந்த கண்களைத் துடைத்துக் கொண்டு தாயை தேற்ற முயற்சித்தாள்.

"எனக்கு ஒன்னும் இல்லம்மா. ஏதோ பழய ஞாபகம் வந்திருச்சி. நான் நல்லாத்தான் ஈரன்மா. இங்க பாருங்க உங்க புள்ள நல்லாத் தான் இருக்காள்." போலிப் புன்னகை உதிர்த்த சர்மியை நோட்டமிட்ட தாய் ராபியா,

"என்னா பழய ஞாபகம் வந்திருச்சா? அப்போ அந்த அதீக் பையன் ஞாபகம் வந்ததா சொல்றியா சர்மி?" தாயின் கேள்வி குறித்து திகைத்துப்போன சர்மி,

'ஏன்ட யா அல்லாஹ்! இப்போ எதுக்கு அதீக் விஷயமா இந்த உம்மா பேசுறாங்க? நான் என் உம்மாக்கிட்ட என்ன சொல்லி சமாளிக்கப் போறன்? சத்தியமா கஷ்டமா இருக்கு அல்லாஹ்.'

"சொல்லு சர்மி.. அந்த அதீக் பையன் இன்னும் உன் மனசுல இருக்காமா?"

"ஆஹ்! அது.. ஹ்ம்ம்.. ஓம்மா.." பொய்யைச் சொல்லி தப்பிக்க முயன்றவளை தொடர்ந்து வந்தது அடுத்த கேள்வி.

"ஏன்மா? பிலால் உன்கூட நல்லமில்லயா? அவர்  நல்லா இருந்தா அதீக் ஞாபகம் வர வாய்ப்பில்லயேமா. என்ன நடந்திச்சி சர்மி?"

பிலால் குறித்தான தொடர் கேள்வி சர்மியை மீள் கண்கலங்க வைக்க ஏதும் பேசாது வாய்மூடி நின்றாள்.

'சர்மி இப்போ எதுக்கு திரும்ப அழுகுற? பிலால் கூட பேசினப்போ என்னம்மா சொன்னாரு?'

"உ.. உம்மா.. அது. அதுவந்து..."

"சொல்லு சர்மி..."

பதிலுக்கேதும் பேசாது அழுகையுடனே ஓடிப்போய் அறைக்கதவை மூடிக்கொண்ட மகளின் நிலை குறித்தான விடயங்களை ஊகித்துக் கொண்ட தாய் ராபியா, உண்மை நடப்பு குறித்து கண்டறிய முனைந்தாள்.

ஆம்! அந்த மேசையில் கிடந்த சர்மியின் மொபைலை எடுத்து சர்மி இறுதியாய் டயல் பண்ணியிருந்த பிலால் இலக்கத்தை ரீடயல் செய்தவளாய், பிலாலுக்காக அழைப்பிலே காத்திருந்தாள்.

கதை தொடரும்… Aathifa Ashraf

[products]

கருத்துகள்