ஊண் இன்றி உறக்கம் இன்றி உடலிலிருக்கும் உயிருக்கும் உத்தரவாதமின்றி உண்மையாய் உழைக்கும் தாதியர்களை தலைவணங்குகிறோம்
கண்ணாக கருத்தாக கண்ணிமைக்குள் மணியாக மனிதர்களை காத்திடும் வலிமைமிக்க பெருந்தகைகள் மனசலிப்பு இன்றி அரவணைத்து பராமறித்திடும் மறு தாய்மார்கள் தாதியர்கள்
உயிர்த்தாகம் கொண்ட கொரோனா கொள்ளை கொண்டது கொன்றும் தின்றது பாரெங்கும்
கொடியோன் உன்னை கொன்றே தீருவோம் எனக் கோசம் இட்டு கொள்ளை கொண்டவனுக்கு எல்லை இட்டார்கள் இன்று இலங்கையில்
தாய் தாயை கருவினில் சுமந்த போல -தம் கருவினில் தாய்நாட்டை சுமக்கும் தாதியர்களை தலைவணங்குவோம்...
கருத்துகள்
கருத்துரையிடுக