நபியின் காலத்தில் தொற்று நோய் ஏற்பட்ட போது மஸ்ஜிதுகளில் ஜமாஅத் தொழுகை தடுக்கப்பட்டதா?

நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழும் காலத்தில் கொள்ளை நோய், தொழு நோய் போன்ற தொற்று நோய் ஏற்பட்டிருந்தும் "ஐவேளைத் தொழுகை மற்றும் ஜும்ஆவுக்கு மஸ்ஜிதில் ஒன்று கூட வேண்டாம்" என்று நபி கூறியதாக பலவீனமான ஹதீஸ் கூட இல்லை.

மாறாக தொழுகைகள் நடாத்தப்பட்டது மட்டுமன்றி ஜனாஸா தொழுகைகள் கூட ஜமாஅத்தாக நடைபெற்றது.

தொற்று நோய் பற்றிய நபியின் நேரடி வழிகாட்டுதல் இப்படி இருக்கும் நிலையில்,

மழை பொழியும் நாட்களில் “ஸல்லூ பீஃ ரிஹாலிகும் (உங்கள் வீடுகளில் தொழுங்கள்)” என்று கூறுமாறு வந்த நபியின் வழிகாட்டுதலை மழை பெய்து வெள்ளம் வந்தால் கூட நடைமுறைப்படுத்த முன் வராதவர்கள் சம்பந்தம் இல்லாமல் தொற்று நோயுடன் தொடர்பு படுத்தி “வீடுகளில் தொழுது கொள்ளுங்கள்” என்று கூறுவது நபி வழியாக முடியாது.

நபியின் காலத்தில் மழையும் இருந்தது. தொற்று நோயும் இருந்தது. மழைக்கு “வீடுகளில் தொழுது கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். தொற்று நோய்க்கு “வீடுகளில் தொழுது கொள்ளுங்கள்” என்று கூறவில்லை.

எனவே, மார்க்க ரீதியாக இவ்விடயத்தை அணுகும் போது தொற்று நோயைக் காரணம் காட்டி மக்களை ஜமாஅத் தொழுகைக்கு வருவதைத் தடுப்பது முற்றிலும் தவறாகும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

நஸ்ரி ஜிப்ரி ஸலபி

கருத்துகள்