பாரமானதில்லை எனக்கு நீ

கண்களில் கண்ணீர் திவளையாக - இதயமோ குவளையானது...

கடலிலிருந்து எழுந்தாலும் மழை நீர் உப்பாய் வீழ்வதில்லை... வலிகளை தந்தாலும் - நீ அன்பை தவிர வேறொன்றும் இல்லை என்னுள்...

இரவுக்கு நிலவும் எனக்கு நீயும் பாரமானதில்லை என்றும்...

உனக்கென காத்திருக்கும் விழிகளுக்கு-நீ தந்த வலிகள் பாரமில்லை இதயத்திற்கு...

பாத்திமா அ(F)ப்ரின் அட்டாளைச்சேனை

கருத்துகள்