அல் குர்ஆனை அறிந்து கொள்ளல்

இன்றைய நாட்களில் வீடுகளில் அனைவருமாக அல்குர்ஆன் ஓதுவது பற்றி பலரும் பேசுகின்றனர். உணர்வற்று இருந்த ஆன்மீக உணர்வு சற்று கிள்ளிவிடப்பட்டுள்ளமை மகிழ்ச்சி. என்றாலும் ஷேக் அலி தன்தாவி அருமையான உதாரணமொன்றை சொல்கிறார்.

பத்திரிகை வாசித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதரை நீங்கள் காண்கிறீர்கள். அவர் ஆரம்பித்தில் இருந்து இறுதிவரைக்கும் பக்கம் பக்கமாக அதனை பிரட்டி வாசித்து முடிக்கிறார். பின் நீங்கள் அவரைப் பார்த்து,

"பத்திரிகை யில் என்ன விஷேச செய்திகள்?" என்று கேட்கிறீர்கள்.

அவர் மிகவும் சிம்பலாக

"தெரியவில்லையே! அதில் என்ன உள்ளது என்று விளங்க நான் ட்ரை பன்னவில்லை. சும்மா வாசித்து முடித்தது விட்டேன்" என்கிறார்.

இப்போது இவரைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? இவர் சரி என்று சொல்வீர்களா? ஆரம்பம் முதல் இறுதி வரை செய்திகளை வாசித்து முடித்தும் ஒன்றும் புரியவில்லை என்று சொல்வது அவர் பத்திரிகையின் அனைத்து செய்திகளையும் புறக்கணிக்கிறார் என்று முடிவு செய்வீர்கள்.

அப்படியானால் அல்குர்ஆனை முழுமையாக ஓதி முடித்ததும் ஒன்றும் புரியவில்லை. புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை என்று சொல்பவரை, ஏன் அல்குர்ஆனை புறக்கணிக்கிறார். என்று நீங்கள் சொல்வதில்லை?

இந்த முசீபத் எப்படி முஸ்லிம் உம்மத்தை பீடித்தது? ஏன் முஸ்லிம்கள் அல்குர்ஆனை புரிவதிலிருந்து தவிர்ந்து கொண்டே இருக்கின்றனர்? இன்று அல்குர்ஆன் அவர்களது கைகளிலே இருக்கின்றது. கண்களும் காதுகளும் நிரம்பி வழியும் அளவுக்கு அல்குர்ஆன் இன்று கிடைக்கின்றது".

ரியாஸ் லதீப்
Advertising that works - yX Media Monetize your website traffic with yX Media

கருத்துகள்