காதல் சொல்கிறேன் - வாப்பா!

காதல் சொல்கிறேன்! காதலா! உனக்காக எதுவும் செய்ததில்லை! எனக்காக நீ செய்ததை சொல்லியதும் இல்லை உனக்கு பெயர் வாப்பா!

எனக்கொன்று தெரிந்தாக வேண்டும். வாப்பாவுக்கும் நண்பனுக்கும் என்ன வித்தியாசம் ? வாப்பாவுக்கும் காதலனுக்கும் என்ன வித்தியாசம் ? வாப்பாவுக்கும் ஆசானுக்கும் என்ன வித்தியாசம் ? அனைத்துமே உன் உருவில் இருக்க பதவிகள் மட்டும் வேறு! அனைத்துமே வாப்பா!

அன்பின் மறுபெயர் நீதனப்பா! பாசம் எனும் பொக்கிஷத்தை மறைத்து வைத்து உன்னுள்ளே உறவாடும் மாமனிதன் நீ...!

உன் அன்பை கண்ணறிய கண்டதுமில்லை காதறிய கேட்டதுமில்லை வாய் சொல்லி பழக்கப்பட்டதும் இல்லை ஆனால்,ஓர் நாள் கண்டேன் நான் உன்னை விட்டுப் பிரியும் அந்த ஞாயிறு தினத்தன்று.

கண்களில் கண்ணீரோடும் மனதில் வலியோடும் என்னை முஆனகா செய்த அத்தருணங்கள் மீண்டும் வருமா? வாப்பா...!

பிரிந்தது எதுவும் உன்னோடு இருக்க முடியாது என்பதற்காகவல்ல உன் மகள் நான் நீ அறிய சாதிக்க வேண்டும் என்பதற்காக

வாப்பா...உன் வியர்வை துளியும்-என் கல்வியின் எட்டுக்களும் என்னை வழிப்படுத்திய ஒவ்வோர் நூற்களும் என்னால் பயனடைந்த ஒவ்வோர் மணாக்கரும் பதில் சொல்லும் இவ்வுலகிலல்ல வாப்பா!! மறு உலகில் உனக்கான கேள்வி கணக்கின் போது...!

நீ சொல்லும்- உனக்கு சிறந்த மகளாக உடன் பிறப்புக்களுக்கு சிறந்த சகோதரியாக போற்றத்தக்க சிறந்த சமூகப் பெண்ணாக புகுந்த வீட்டுக்கு சிறந்த மருமகளாக கரம் பிடிக்கும் கணவனுக்கு சிறந்த மனைவியாக எனதான பிரசவங்களுக்கு சிறந்த தாயாக வீட்டின் தலை சிறந்த குடும்பத்தலைவியாக என்றும் உன் கண் முன்னே மிளிருவேன்-உன் ஆசைப்படி நீ கண்மூடிய பின்னும் உனக்காக ஸாலிஹான பிரார்த்தனையாக வருவேன் கப்ர் அறைவரை உன்னோடு...

நீ எப்போதும் என்னை மோடிவேட் பண்ணும் ஒவ்வோர் சொற்களும் ஆழாமாக என் மனதில் பதிந்தது மட்டுமல்ல-என்னை ஆளுமையாக்க என்னிலே முயற்சி என்னும் ஆணிவேரை பதித்தது-பதித்துக்கொண்டிருக்கின்றது.

நீ மாதாந்தம் முடிய முன்னே எனக்கு தரும் மாதாந்த சம்பளம் நானும் கொடுத்து விட்டு சந்தோஷம் அடைகிறேன்-ஆனாலும் பணம் வந்ததோ எப்படி என்று நான் அறிய வாய்ப்பில்லை... அப்படி யோசித்தாலே மனமுறுகி விடுவேன்-என் தந்தை உன் கஷ்டம் நினைத்து...

பெரிய இடம் சென்று படிக்க நான் ஒன்றும் பெரும் பணக்காரியுமல்ல ஆனாலும் சென்றேன்-என் தந்தையின் முயற்சியினால்...

உன் கை,காலில் ஏற்பட்ட வடுக்கள் ஓர்நாள் உனக்கு வலிமையை ஏற்படுத்தும்... அப்போதெல்லாம் நான் உன்னோடு இருந்திருக்க மாட்டேன் வாப்பா...

பண்பாடு சொல்லி மணபந்தத்தில் இணைத்து வைத்தது போல என்னையும் வெகேஷனுக்கு கூட்டிச்செல்வாய்-பண்பாட்டுடன் பாடம் சொல்லி...!! மீண்டும் வராதா உம்முடன் நிரந்தரமாய் தங்கும் அந்த அழகிய நாட்கள்???-வாப்பா

வாப்பா-உன்னோடு இருந்த தினங்களில் உன் அருமை பெருமையோ உன் கஷ்டமோ தெரியவில்லை ஆனால்-இப்போது அனைத்துமே ஓர் பாடமாக என் கண் முன்னே ஓடிக்கொண்டிருக்கிறது வாப்பா,

வாப்பா, தூரத்துக்கு போனது தானோ துயரம் புரிந்தது-தெரிந்தது இனியும் விட்டு விலக மாட்டேன் என்பதற்கு உத்தரவாதம் இல்லை வாப்பா!

என்றும் ஒருநாள் நீ எனக்காக பட்ட கஷ்டங்களுக்கான சன்மானத்தை என் மூலம் மறுஉலகிலும் நிச்சயம் பெற்றுத் தருவேன்...வாப்பா!!!

இயற்கையில் இறைவன் உன்னை செவிடனாக ஆக்கினாலும் இம்மையில் நீ செவிடன் என்று பெயர் பெற்றாலும் மறுமையில் உன் மகள் நான் உனக்காய் சேர்த்துத் தந்த நன்மைகளை உன் செவிகேட்க வைப்பேன் உன் மகள் நான் செல்வந்தனாய் மஹ்ஷரில் காண்பேன் உம்மை வாப்பா...

என்னிலிருந்திருக்கும் உம் மனக்கஷ்டங்களை மன்னித்து விடுங்கள் வாப்பா...

அனைத்தும் சொன்னேன்! சொல்லாத ரகசியம் சொல்கிறேன்!

உன் கை கரட்ட கஷ்டம் கண்டு மாதாந்தம் கூலி கொடுத்து என் கல்விச்செலவு பார்த்து உன் தோல் சுருங்க நான் மட்டும் சொகுசறையில் பாடம் படித்து பட்டம் எடுத்து என் பெயர் பின் சேர்த்து மகிழ சுயநல வாதியன்று! உன் மகளப்பா!

சொகுசு அறைகள் எனக்கு தேவையன்று! வரட்டு கெளரவ பாடம் தேவையன்று! உன் மூச்சுபடும் தூரத்தில் உன் பாசம் படும் வேகத்தில் என் பாடம் தொடர்கிறது. பட்டம் வரையல்ல! உனக்கான விமோசனம் வரும் வரையில்....

அக்ரமின் மகள்!
yX Media - Monetize your website traffic with us Advertising that works - yX Media

கருத்துகள்