விரைவில் ரமழான் வருகின்றது. கொரோனா ஏற்படுத்திய விளைவுகளினால் இரண்டு சவால்கள் எமக்கு முன்னால் உள்ளன.
- ரமழானில் ஆன்மிக ரீதியாக சமூகத்தை வழிகாட்டல். ரமழானை முடிந்தவரை பயன்படுத்துதல்.
- கொரோனாவிற்குப் பின்னரான சமூகத்தை பொருளாதார ரீதியாக கைகொடுத்து கட்டியெழுப்புதல்.
ஒவ்வொரு ஊரிலுள்ள வளங்களை உச்சகட்டமாக திட்டமிட்டு பயன்படுத்துவதன் மூலம் இரண்டு வகை சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும். இன்ஷாஅல்லாஹ்.
உதாரணமாக, ரமழானில் நோன்பாளிகள் வழங்கும் பித்ரா (அரிசி மாத்திரமல்ல/அண்ணளவாக 200 ரூபாவிற்கு மேல்) பெறுமதியை ஒவ்வொரு ஊரிலும் ஒன்று திரட்டினால் பல மில்லியன் ரூபாய் திரட்டலாம். அக்கரைப்பற்றில் பித்ரா மாத்திரம் குறைந்தது 50 இலட்சத்திற்கு மேல் திரட்டலாம். சதகா/ ஸகாத் வேறு.
இதய சுத்தியுடன் திட்டமிடலுடன் இயங்கினால் அல்லாஹ்வின் உதவியுடன் அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு சாத்தியப்படுத்தலாம். இன்ஷாஅல்லாஹ்.
ஒரு Project ஆக இத்திட்டத்தை செயற்படுத்துவோம். அனைத்து ஊர்களும் சிந்திக்கலாம். நடைமுறைப்படுத்தல், சாத்தியப்பாடுகள் பற்றி கலந்துரையாடலாம்.
எம்.ஐ.ஸாஹிர்
கருத்துகள்
கருத்துரையிடுக