ஸாதாத் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி

கொடபிடிய அகுறஸ்ஸ ஸாதாத் பாலர் பாடசாலையின் 2025ம் ஆண்டுக்கான சிறார்களின் விளையாட்டுப் போட்டி 2025.08.23 ஆந் திகதி சனிக்கிழமை ஸாதாத் மகா வித்தியாலய மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அன்றைய தினம் முற்பகல் 8:30 மணியளவில் போட்டி நிகழ்ச்சிகள் இனிதே ஆரம்பமாகியது .

இப் போட்டி நிகழ்ச்சிகள் பாலர் பாடசாலை ஆசிரியர்களான M.M.F. ரிஸானா ஆசிரியை, M.Z. கரிமுந்நிஸா ஆசிரியை, M.R. தாஹிரா ஆசிரியை ஆகியோரின் வழிகாட்டலில் இடம்பெற்றது. அன்றைய தினம் பாலர் மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகளும், வினோத உடைப் போட்டியும் இடம்பெற்றது. நிகழ்வின் இறுதியில் அனைத்து மாணவர்களுக்கும் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

[smartslider3 slider="34"]
Ibnuasad

கருத்துகள்