புலமைப் பரீட்சையில் ஸாதாத்தில் நால்வர் சித்தி - 2026

புலமைப் பரீட்சையில் ஸாதாத்தில் நால்வர் சித்தி - 2026


மாறை கொடபிடிய ஸாதாத் மகா வித்தியாலயத்தில் நான்கு மாணவர்கள் வெட்டுப் புள்ளியை விட அதிக புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளனர்.

ஸாதாத் பாடசாலை ஊடாக நாற்பது மாணவர்கள் இப் பரீட்சையிற்கு தோற்றியிருந்தனர். அவர்களில் 38 மாணவர்கள் 70 கு மேல் புள்ளிகளையும், 24 மாணவர்கள் 100 கு மேல் புள்ளிகளையும், 4 மாணவர்கள் மாத்தறை மாவட்ட தமிழ் மொழி மூலமான  வெட்டுப்புள்ளியான 135 கு மேல் புள்ளீகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

சிறப்பான பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள்:

  1. அப்துல் அலீம் பாத்திமா அன்பா – 151 புள்ளிகள் 
  2. முஹம்மது ரோஷான் பாத்திமா ஹம்னா – 151 புள்ளிகள்
  3. அப்துல் ஸலாம் பாத்திமா ரம்(Z)தா – 143 புள்ளிகள்
  4. நவ்பர் பாத்திமா ஷிப்கா  – 136 புள்ளிகள்

இம்முறை இப் பாடசாலையின் தரம் 5 வகுப்பாசியர்களாக  M. M. S ஹுஸ்னா ஆசிரியை  மற்றும் M. M. F முனீபா ஆசிரியை ஆகியோர் கடமையாற்றினர். 

அவர்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் சிறந்த வழிகாட்டுதலுக்கு மனமார்ந்த நன்றிகள். மேலும், மாணவர்களின் வெற்றிக்கு தொடர்ந்து ஆதரவளித்த பாடசாலை அதிபர், பாடசாலை ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் மற்றும் OBA SDS அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

Ibnuasad

புலமைப் பரீட்சையில் ஸாதாத்தில் நால்வர் சித்தி - 2026


கருத்துகள்