பருவம்
தாண்டிட்டா
கண்ட கண்டவங்கலெல்லாம்
வந்துடுவாங்க
மாப்புள பேச..
ஆச்சரியம்
என்னன்டா
கடையில செய்ற
பி(b)ஸினஸ் போல
கல்யாணம் பேசுறதுதா..
என்னென்ன படிச்சிருக்கா
என்ன உயரம்
என்ன வயசு
ஆயிரத்தெட்டு கேள்விங்க
பெத்தவங்க தலய சுத்தும்..
அதுக்கும் மேல
பொட்ட புள்ளக்கி
தலயே சுத்தும்..
வீட்ட விட்டு தலைமறைவாகிடுவோமோ
என்று கூட எண்ணவைக்கும்
பு(b)ரோக்கர்ஸ் தொல்ல..
அடுத்த விசயம்
என்னன்டா..
பு(b)ரோக்கர்ஸ் மார்ட
போடோ(t) தொல்ல..
நிண்டுகொண்டு இருக்குர
போடோ(t) குடுத்தா,
உக்காந்திட்டு இருக்குற
போடோ(t) கேப்பாங்க..
அபாயா உடுத்த போடோ(t)
குடுத்தா..
ஸல்வாரோட ஒரு
போடோ(t) கேப்பாங்க..
எங்க போய் சொல்ல இதெல்லாம்..
வீடு தேடி
நாள் தவறாம
பு(b)ரோக்கர்ஸ் வர..
புள்ளய கொஞ்சம்
காட்ட சொல்ல...
பெத்தவங்களு அத
ஆமோதிக்க
சலிப்புடனே வந்து
நின்டுட்டு போவா அந்த புள்ள..
என்னவோ
பெ(f)ஸ்டிவள் ஸேல்ல
சாமான் விக்க
போட்ட மாதிரி..
பொண்ணா பொறந்தா
இத்தன கஷ்டமான்னு
நெனக்க வச்சிடாதீங்க..
மனச பாத்து
முடிவு பண்றாங்களோ
இல்லயோ
வெளி தோற்றத்துல
கண்ணும் கருத்துமா
இருக்காங்க...
இவ்வலோ நாளும்
சும்மா இருந்த
பெ(f)மிலிக்கு
அவங்க ராஜ பரம்பரன்ற
எண்ணம் வந்துடும்..
தன்ட புள்ளக்கு கல்யாணம்
கட்டம் வந்துட்டா...
குடும்பம்னாலே
பிரச்சின ஆயிரத்தெட்டு
இருக்கத்தா
செய்யும்..
அது படிச்சவன்ட பெ(f)மிலியா
இருந்தா என்ன..
படிச்சாதவன்ட பெ(f)மிலியா
இருந்தா என்ன..
என்ன ???
படிச்சவன் பெமிலில
மறைமுகமா பிரச்சின..
படிச்சாதவன்ட அதுக்கெதிரா
இருக்கும்..
ஆனா வாய்ப்பு நெறய
இருக்கு இது தலகீழா நடக்க..
தான் ராஜ
பரம்பரன்னு நெனக்கிறவங்களே..
படச்ச ரப்(b)புக்கு
கீழ நாங்க எல்லாருமே
அடிமைங்கதான்..
அது ஆண்டியோ அரசனோ..
வேறுபாடு இல்ல..
கபுருக்கு போகும் போது
நீங்க தேடி
அலஞ்ச பெ(f)மிலி ரெஸ்பெக்ட்
வராது உங்க கூட ..
இரு மனம் விரும்பின்
அதுக்கு மேலென்ன தகுதி
வேண்டி கெடக்கு..
பெண் பார்க்கும்
படலம் மாறி வருது
ஷொப்பிங் மார்க்கட்டாய்...
கருத்துகள்
கருத்துரையிடுக