அன்பின் மொழி எது

ஒரு தாய் குழந்தையை

ஈன்றொடுக்க முன்

அவள் குழந்தையுடன்

பேசும் மொழியில்

அன்பின் மொழியை அங்கு காணலாம்

ஆணோ  பெண்ணோ

இறைவன் படைத்த தத்தம்

துணையாகிய அவளை அவனை

மட்டும் அன்பு கொள்கையில்

அன்பின் மொழியை அங்கு காணலாம்

படைத்த இறைவன்

அடியான் மீது

காட்டும் தயவிலும்

அன்பின் மொழியை காணலாம்

இது போல உன்னதமான

ஒவ்வொன்றிலும்

அன்பின் மொழியை காணலாம்.

அதில் சிலருக்கு

மொழி புரியும்.

பலருக்கு

மொழிபெயர்ப்பு தேவைப்படும்.

Nafees Naleer

(Irfani, SEUSL)

வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்