இயக்க வைத்தியம் வேண்டாம் நமக்கு

இயக்க பைத்தியம் பிடித்துவிட்டது. இன்னும் இயங்கிய பாடில்லை. சோரம் போகும் சமூகமல்ல நாம். சோர்ந்து போகும் சமூகமல்ல நாம்.

இறைவனை மாத்திரம் அஞ்சும் சமூகம் நாம் உலகில் வாழ வரவில்லை. வாழ வைக்க வந்தோம். ஆனால் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இறைவனின் பிரதிநிதி என்று சொல்லி கொள்கின்றோம். அவன் மார்க்கம் எப்படி போனாலும் பரவாயில்லை. நாம் வாழ்வை நுகர்ந்து கொண்டு தான் இறுக்கின்றோம். வாழ்வை முதலீடு செய்ய வில்லை.

மார்க்கத்தில் தெரிந்த ஒரு மண்ணும் இல்லை. தீர்ப்பு வழங்கும் இமாம்களாகி விட்டோம். நாங்கள் அழைப்பார்களே அன்றி. தீர்ப்பு வழங்கும் நீநிபதிகளல்ல.

இதாயதுல்லாஹ் (இஸ்லாஹி)

வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்