உளத்தூய்மை

உள்ளமெனும் கோட்டயிலே ஊசலாடும் உன் எண்ணமதில் பதித்திடு உன் ஈமானை உறுதியான முத்திரையாய்!

நாகரீக நவீனமதில் நாளும் நீ மறக்காமல் தக்வாவெனும் ஆடையை தக்கவை உன் உள்ளதில்!

புர்க்கானெனும் வேதமதை தயங்காமல் நீ வழங்கிட்டால் தாயாளன் உனக்களித்திடுவான் தரமான தரஜாவை!

துஆவெனும் ஆயுதத்தால் துடைத்தெறி உன் பாவமதை! துன்யாவெனும் மோகமதை ஒழித்திடு உன் உள்ளதில்!

இஃலாஸ் எனும் இதயமுடன் இபாதத் நீ செய்திட்டால் இறங்கியும் உன்னுள்ளமதில் ஈமானின் ஒளிவீச்சு!

திக்ரெனும் தியானத்தில் திளைத்திட்டால் உன் நாவு திறக்கும் பல வாசல்கள் ஈருலக நலம் நாடி!

சோதனையெனும் கூட்டினிலே சாதனைகள் நீ படைக்க வரஉ எனும் பேணுதலை வழக்கமாக்கி கொள் உன் வாழ்வினிலே!

முஸ்லிமெனும் பெயர் தாங்கி வெறும் முகவரியோடு வாழும் நாம் முஃமினெனும் தரஜாவை அடைந்திடவே முயன்றிடுவோம்!

JAFEER NOORUL SHIFA 2nd YEAR SUESL
வெளியீடு : வீயூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்