புதிய ஸீனியர்களுக்கொரு மடல்

தென்கிழக்கில் பாதங்கள் பதித்து தெவிட்டிடும் பாடங்கள் பயின்று பட்டங்கள் பெற்றிட வந்த பல்திசைகளும் ஈன்றெடுத்த என் சக தோழமைகளுக்கு எனதுள்ளத்து ஸலாம்

விட்டிற் பூச்சிகளாய் வீட்டிலே ஒட்டிக் கிடந்து சோதனைகள் பல தாண்டி சாதனைகள் புரிய வந்திருக்கும் ஜூனியர் சொந்தங்களை தம்பி, தங்கைகளாய் மதித்திடுவோம்.....

பகிடிவதை என்ற பெயரில் பட்டாம்பூச்சிகளின் சிறகொடிக்காது வான் உயரப் பறந்திடவே வழிகாட்டியாய் நாமிருப்போம்.....

தரக் குறைவுப் பேச்சுக்களை தரைமட்டம் ஆக்கிடுவோம்..... அமுதம் சொரியும் வார்த்தைகளை அள்ளிச் செவிகளில் பாய்ச்சிடுவோம்.....

ஒழுங்கு விதிகள் அனைத்தையுமே ஒவ்வொன்றாய் உரைத்திடுவோம்..... அழகிய நன்னடத்தைகளால் அகங்கள் குளிரச் செய்திடுவோம்....

நேற்றலர்ந்த பல்கலை மலர்களை நேரிய வழியில் செலுத்தியே பாரிய தடைகளையும் பாரினில் வென்றிடச் செய்வோம்.....

ILMA ANEES WELIGAMA SEUSL 2ND YEAR

கருத்துகள்