வானத்தின் நட்சத்திரங்களாய் மின்னி பூமியிலே பூத்துக் குலுங்கும் பூக்களாய் பல்கலையில் உங்கள் இதழ்களைப் பரப்ப ஜுனியர்ஸ்களே அன்புடன் வருக!
பகிடிவதை என்கிறார்கள் ஆனால் பகிடிவதையல்ல நாளைய தலைவர்களுக்கான வழிகாட்டல்கள் - அது இது தான் நீங்கள் கூறும் பகிடிவதையா?
பல்கலைக்கழக மதில் பல்கலையும் கற்றுத் தந்து படிப்பும் சொல்லித் தந்து ஒழுக்க சீலர்களாய் மாற்றும் களம் அது
புத்தகத்தைத் திறக்க வைப்போம் நாம் புத்தாக்க அறிவைப் பெருக்கிடவே நல்வழி நடந்திடவே நல்லதையே கூறிடுவோம்
விதைத்திடுவோம் விதையை ஒற்றுமை எனும் அறுவடைக்கு உள்ளத்திலே சமத்துவம் பேணவே இங்கு ஒரு சில பொதுமை வழிகள்
தடைகளைத் தகர்த்து தடம் பதிக்கும் தாயகம் இது தத்தளிக்கும் தண்ணீர்க் குளம் அல்ல உமை தாழ்த்துவதும் நம் நோக்கம் அல்ல
கருத்துகள்
கருத்துரையிடுக