மனித உறவுகள் மலர்ந்திட பகைமை உணர்வு ஒழிந்திட இனிதென உறவுகளை இணைக்க உரித்தென உணர்த்திட்ட - ஸலாம் காலாவதியான கடைப் பொருளாய் கவனிப்பாரற்று கூச்சமாய் குனிந்து போகுதே பாவனை இழந்து
பகடிவதையின் பெயரால் ஸலாம் கூறி குறித்த காலம் கரைந்து போக மௌனித்த முகமாய் மறைந்து வெறுத்த உறவாய் முகம் சுழித்து எதிரில் நிற்பவன் எதிரி என்று பார்க்கும் -நீ இம்மூன்று மாதம் மட்டும் கூறாதே எனக்கு - ஸலாம்
அறிமுகம் தந்து உறவாகி ஒளிர உணர்வுகளின் வெறுப்புகள் வழிவிட்டு ஒளிதரும் என்பது வழிதவறியவனின் வாதம்
உயிர்கள் குடித்து உணர்வுகள் பறித்து அடிமைத்தம் ஏற்றி அமைதியை எதிர்த்து அன்பை மறைத்து உறவு உருவாக்க எவ்வேதம் சொல்லித்தந்தது?
வழிகாட்ட நெறிகாட்ட ஆயிரம் வழிகள் உண்டு சிந்தனை மாற்றம் - நூலகம் சாதனைகள் கூட – மைதானம் ஆற்றல் அறிந்து அகிலம் மலர – ளுசுகு களம் தொடுத்து கை கோர்க்க – தமிழ் சங்கம் தட்டிக் கொடு விட்டுக் கொடு வெற்றிக் கொடி எட்டிப்பிடி
கருத்துகள்
கருத்துரையிடுக