குறிஞ்சியின் குறியீடுகள்

பனியினில் குளித்து அட்டைகளால் அழுக்காகி இரத்தம் துவைத்து வெயிலில் துடைத்துக் கொள்ளும் விந்தை மனிதர்

போதிய வருமானம் போசாக்கான உணவெல்லாம் கனவாகிப் போனதால் மந்த போசணை மாவட்டமாம் நுவரெலியாவில்.

இலைகளோடு உறவாடி மலைகளில் மண்டியிட்டு கொய்தவற்றால் கூடைநிரப்ப களைகளால் பாதியென்று கங்காணியும் கணக்குத் தீர்ப்பான்

வெள்ளையரும் வந்து போக மீளா அடிமை வாழ்வில் அற்ப சலுகைக்காய் ஆயிரம் போராட்டங்கள் நூறு ரூபாய் உயர்த்திடவும் உறுதியில்லா அரசாங்கம்

தேய்ந்துபோன ரேகையுடன் இரத்தத்தைச் சாயமாக்கி நாட்டின் பொருளாதாரம் தலைநிமிர முதுகெலும்பாய் கூனி நிற்கும் இவர்கள் குறிஞ்சியின் குறியீடுகள்.

நிலாக்கவி நதீரா முபீன் புளிச்சாக்குளம் புத்தளம்
 

.

கருத்துகள்