கொஞ்சமாய் கோதிக் கொள் என் சில்மிஷங்களை நான் காற்றில் மிதக்கும் பூவாய் குடைசாய்கிறேன்
கொஞ்சிப் பேசும் நேரங்களை கொஞ்சம் நீடித்துக் கொள் கொஞ்சும் மொழியைக் கொஞ்சம் பஞ்சமின்றி படித்து விடுகிறேன்
என் பிதற்றல்களை அப்படியே இரசித்து விடு பின்னொரு நாள் கதை கூறி மகிழலாம்
இந்தக் கன்னியின் கன்னங்கள் உன் வசமாதலால் கணக்கின்றி அன்பு முத்தமிடு முத்திரைகள் முதிர்விலும் இழையூறும் படி
விரல் இடுக்கிலும் நெருக்கம் கொடு நாம் விடை பெற்ற பின்பும் வியாபித்துக் கொண்டே நினைவுகள் வலம் வரட்டும்
கொஞ்சிக் கொண்டே கொள்ளையடி என் அன்பை மழலை கூட ஏங்கும் படி
இந்தப் பிரபஞ்சம் நீயாக என் பிதற்றல்களை நான் தூவ தூவட்டும் அன்பு மட்டும் மழையாக நனைந்து கிடப்போம் சுகமாக
கொஞ்சமாய் கோதிக் கொள் நெஞ்சு முழுவதுமாய் அன்பின் துளிகளை
கருத்துகள்
கருத்துரையிடுக