புற்றுகளில் வாழும் பாம்புகளும் குளங்களில் வாழ்ந்த முதளைகளும் ஊருக்குள் வரும் காலம் தேர்தல் காலம்
எங்கள் வீட்டு மா மரத்தில் குந்தி கத்தும் காகமும் தேர்தல் வாக்களிப்பு விருப்பு வாக்கு என்றெல்லாம் தான் கத்துகிறது
நரிகளைக் கண்டாயா? அதுகளும் தேர்தல் பற்றியும் ஊளையிட்டு எம்மை நல்லாக வாழவைப்பதாக வாக்குறுதி வழங்கிவிட்டது
காகத்தின் கூட்டுக்குள் இனிமேல் நான் முட்டையிட மாட்டேன் என்று குயிலும் கூவி தன்னை வெல்ல வைக்குமாறு வோட்டுக் கேட்டு வந்து விட்டது
இனிதான் முஸ்லீங்களுக்கு பாதுகாப்பாம் நிறைவேற்று குறைவேற்று அதிகாரம் எல்லாம் பட்டம் விடுமாம்
குரங்கு அப்பம் பறித்த கதைதான் இது தேர்தல் காலம்
இரைப்புளுவும் நல்ல பாம்பாக மாறி தேர்தல் கேட்கும் அதுவும் ஜனாதிபதி தேர்தல் கேட்கும்
இக்காலம் தேர்தல் காலம்
கருத்துகள்
கருத்துரையிடுக