அல்லாஹ்வின் அழகிய பெயர்கள்...

அல்லாஹ்வுக்கு மிக அழகான பெயர்கள் இருக்கின்றன. ஆகவே, அவற்றைக்கொண்டே நீங்கள் அவனை அழையுங்கள். (அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.) அவனுடைய பெயர்களில் (தவறான பொருள் கொண்டு) திரித்துக்கூறுபவர்களை நீங்கள் விட்டுவிடுங்கள்; இவர்கள் தங்கள் செயலுக்குத் தக்க கூலியை விரைவில் அடைவார்கள். (அல்குர்ஆன் 7:180)

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறோர் இறைவன் இல்லை. அவனுக்கு அழகான பெயர்கள் இருக்கின்றன. (அல்குர்ஆன் 20:8)

(நபியே!) நீர் கூறும்: ‘நீங்கள் அல்லாஹ் என்றழையுங்கள் அல்லது அர்ரஹ்மான் (அளவற்ற அருளாளன்) என்றழையுங்கள்; (இவ்விரண்டில்) எந்தப் பெயர் கொண்டு நீங்கள் அவனை அழைத்த போதிலும் (அழையுங்கள்.) அவனுக்கு அழகான (இன்னும்) பல பெயர்கள் இருக்கின்றன. (அல்குர்ஆன் 17:110)

(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க! (அல்குர்ஆன் : 13:28)

அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வுக்கு நூறில் ஒன்று போக தொண்ணூற்றொன்பதுபெயர்கள் உள்ளன. அவற்றை அறிந்து (அதன் மீது நம்பிக்கை வைத்து அதை நினைவில்) கொள்பவர் சொர்க்கத்தில் நுழைவார்.(ஸஹீஹுல் புகாரீ 2736)

  1. அல்-ரஹ்மான் = அளவற்ற அருளாளன்.
  2. அல்-ரஹீம் = நிகரற்ற அன்புடையவன்.
  3. அல் மலிக் = மன்னன்.
  4. அல் குத்தூஸ் = பரிசுத்தமானவன்.
  5. அஸ்ஸலாம் = அமைதி அளிப்பவன்.
  6. அல் முஃமின் = அபயம் அளிப்பவன்.
  7. அல் முஹய்மின் = பாதுகாவலன்.
  8. அல் அஜீஸ் = யாவையும் மிகைத்தவன்.
  9. அல் ஜப்பார் = சமநிலையாக்குவோன்.
  10. அல் முத்தகப்பீர் = பெருமையுள்ளவன்.
  11. அல் காலிக் = படைப்பவன்.
  12. அல் பாரி = ஆத்மாவை அமைப்போன்.
  13. அல் முஸ்வ்விர் = உருவமைப்போன்.
  14. அல் கஃப்ஃபார் = பிழை பொறுப்பவன்.
  15. அல் கஹ்ஹார் = அடக்கி ஆள்பவன்.
  16. அல் வஹ்ஹாப் =பெருங்கொடையாளன்.
  17. அல் ரஸ்ஸாக் = அன்னபானாதிஅளிப்பவன்.
  18. அல் ஃபத்தாஹ் = வெற்றி அளிப்பவன்.
  19. அல் அலீம் = யாவும் அறிந்தவன்.
  20. அல் காபில் = கைவசப்படுத்துவோன்.
  21. அல் பாஸித் = தாராளமாகக்கொடுப்பவன்.
  22. அல் ஹாபில் = தாழச் செய்பவன்.
  23. அல் ராஃபிக் = உயர்த்துவோன்.
  24. அல் முஇஸ் = மேன்மை அடையச்செய்வோன்.
  25. அல் முதில் = இழிவடையச் செய்பவன்.
  26. அல் ஸமீஃ = யாவையும் கேட்பவன்.
  27. அல் பஸீர் = யாவையும் பார்ப்பவன்.
  28. அல் ஹகம் = தீர்ப்புச் செய்வோன்.
  29. அல் அதல் = நீதி செய்வோன்.
  30. அல் லத்தீப் = பட்சமுள்ளவன்.
  31. அல் க(Kh)பீர் = உணர்ந்தவன்.
  32. அல் ஹலீம் = அமைதியானவன்.
  33. அல் அழீம் = மகத்துவமுள்ளவன்.
  34. அல் கபூர் = பாவம் தீர்ப்பவன்.
  35. அல் ஷக்கூர் = நன்றி பாராட்டுபவன்.
  36. அல் அலிய் = உன்னதமானவன்.
  37. அல் ஹஃபீழ் = பேணிக் காப்பவன்.
  38. அல் க(K)பீர் = பெரியவன்.
  39. அல் முகீத் = பழிப்பவன்.
  40. அல் ஹஸீப் = கணக்கு கேட்பவன்.
  41. அல் ஜலீல் = மாண்புமிக்கவன்.
  42. அல் கரீம் = கொடை கொடுப்போன்.
  43. அல் ரகீப் = கண்காணிப்பவன்.
  44. அல் முஜீப் = முறையீட்டை ஏற்பவன்.
  45. அல் வாஸிஃ = எங்கும்நிலவுகிறவன்.
  46. அல் ஹகீம் = நுண்ணறிவுடையவன்.
  47. அல் வதூத் = உள்ளன்பு மிக்கவன்.
  48. அல் மஜீத் = தலைமை தாங்குபவன்.
  49. அல் பாஇத் = தட்டி எழுப்புகிறவன்.
  50. அல் ஷஹீத் = சாட்சியுடையோன்.
  51. அல் ஹக் = சத்தியமானவன்.
  52. அல் வகீல் = பொறுப்பு ஏற்பவன்.
  53. அல் கவீ = வல்லமை மிக்கவன்.
  54. அல் மத்தீன் = உறுதியானவன்.
  55. அல் வலீ = கிருபை செய்பவன்.
  56. அல் ஹமீத் = புகழுக்கு உரியவன்.
  57. அல் முஹஸீ = தீர்க்கமாகத் தெரிந்தவன்.
  58. அல் முஈத் = இறுதியில் மீட்டுக்கொள்பவன்.
  59. அல் முஹ்யீ = உயிர்ப்பிப்பவன்.
  60. அல் முப்திஃ = ஆதியில்வெளியிடுபவன்.
  61. அல் முயீத் = மரணிக்கச் செய்பவன்.
  62. அல் ஹை = நித்திய ஜீவியானவன்.
  63. அல் கையூம் = என்றும் நிலைத்தவன்.
  64. அல் வாஜீத் = கண்டுபிடிப்பவன்.
  65. அல் மாஜித் = தலைமை வகிப்பவன்.
  66. அல் வாஹித் = தனித்தவன்.
  67. அல் ஆஹத் = ஒருமைக்கு உரியவன்.
  68. அல் ஸமத் = தேவையற்றவன்.
  69. அல் காதிர் = ஆற்றல் உள்ளவன்.
  70. அல் முக்ததிர் = ஆற்றல் பெற்ச்செய்பவன்.
  71. அல் முகத்திம் = முன்னேறச்செய்பவன்.
  72. அல் முஅக்கிர் = பின் தங்கச் செய்பவன்.
  73. அல் அவ்வல் = ஆரம்பமானவன்.
  74. அல் ஆகிர் = இறுதியானவன்.
  75. அல் ஸாஹிர் = பகிரங்கமானவன்.
  76. அல் பாதின் = அந்தரங்கமானவன்.
  77. அல் வாலி = அதிகாரப்பொறுப்புள்ளவன்.
  78. அல் முத்த ஆலி = உயர்பதவியுள்ளவன்.
  79. அல் பர் = நன்றி அளிப்பவன்.
  80. அல் தவ்வாப் = பட்சாத்தாபிகளைமீட்பவன்.
  81. அல் முன் தகீம் = பழி வாங்குபவன்.
  82. அல் அஃபூ = சகிப்பவன்.
  83. அல் ரவூஃப் = இரக்கச்சிந்தனையுள்ளவன்.
  84. அல் மலிகுல் முல்க் = அரசாட்சிக்குஉரியவன்.
  85. அல் ஜலால் வல் இக்ராம் = கீர்த்தியும்,சிறப்பும் உள்ளவன்.
  86. அல் முக்ஸித் = நியாயம் செய்வோன்.
  87. அல் ஜாமிஃ = சகலமும் பொதிந்தவன்.
  88. அல் கனீ = தேவையற்றவன்.
  89. அல் முக்னீ = தேவையற்றவனாகஆக்குவோன்.
  90. அல் மானிஃ = துன்பம் தடுப்பவன்.
  91. அல் ளார் = துன்பம் அடையச் செய்பவன்.
  92. அல் நாஃபிஃ = பயன் அளிப்பவன்.
  93. அல் நூர் = ஒளி தருபவன்.
  94. அல் ஹா தீ = நேர்வழிசெலுத்துவோன்.
  95. அல் பதீஃ = புதுமை செய்வோன்.
  96. அல் பாகீ = நிலையாக இருப்பவன்.
  97. அல் வாரித் = உரிமையாளன்.
  98. அல் ரஷீத் = நேர்வழியில் இருப்பவன்.
  99. அல் ஸபூர் = பொறுமையாளன்.

கருத்துகள்