என் மேனி என்ன செய்தது உனக்கு? கொய்து விட்டாயே பூவிலும் மேலான - என் பொன் மேனியை
எட்டி அடில் வைத்து - எட்டு வயது கூட எட்டவில்லை பதினெட்டு வயது மாது என நினைத்து பதம் பார்த்து விட்டது - உன் காமம்
பாலியல் என்ற சொல்லின் அர்த்தம் கூட உணராத வயதில் படுக்கையில் கிடந்த சோகம் எனக்கு மட்டும் வந்ததேனோ
சின்ன தேகம் - என் மீது சிறுத்தையாய் பாய்ந்தாயே சிறுகணமேனும் சிந்தித்தாயா நானும் உன் சகோதரியென
நீ பந்தாடிய என் மேனி பத்திரிகைகளில் தலைப்புச் செய்தி ஆனது மட்டுமே என் மரணத்தின் தீர்வு
கைக்கூலியான காவல் நிலையமும் கை விரித்து விட்டது என் கண்ணீரிற்கு
என் கதறல் கேட்ட உன் காதுகளில் விழவில்லையா உனக்கும் என்னை போல மகள் பிறப்பாள் என
கள்ளிப்பால் ஊற்றி கொன்ற காலம் போய் காமப்பால் கொல்லும் காலமானது இக் கலியுகம்
என் அம்மா அளுதளுது தேம்ப ஆறதல் கூற கூட முடியாது நின்ற என் அப்பா எப்படித்தான் தாங்கினாரோ இச்சதிகாரர்களின் சூழ்ச்சியை
எனக்கான நீதி - என்னோடு சேர்த்து என்றோ புதைக்கப்பட்டுவிட்டது ஆனால் - உன்னைப் போன்ற காமுகன் இன்னும் நடமாடுகிறான்
மானிடா! அடுத்தவன் வீட்டு பிள்ளையின் அழுகுரல் உன் வீடுகளில் ஒலிக்கும் முன் உணர்ந்திடு என் வலியை கிளர்ந்திடு பாலியலை தடுத்திட
ரஹ்னா பின்த் மகுனதுர் ரஹ்மான் ஹுதாயிய்யா இலங்கை தென் கிழக்கு பல்கலைகழகம் மருதமுனை
கருத்துகள்
கருத்துரையிடுக