உங்களுக்கு பிடித்த மாதிரி வாழுங்கள்

உங்கள் ரயிலை தவற விடாதீர்கள் மனிதன் மனிதனாக இருப்பதுதான் அவனது அடிப்படை உரிமை.

உண்மையான ஒரு மனித சமூகத்தில் ஒருவன் எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணுகிறானோ அப்படியிருக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

ஒருவன் தெருவில் புல்லாங்குழல் இசைக்கும் ஒருவனாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் அவனை அனுமதிக்க வேண்டும்.

அவனால் இந்த உலகில் மிகப்பெரிய பணக்காரனாக ஆக முடியாது அவன் தெருப் பிச்சைக்காரனாகத்தான் இருக்க முடியும்.

இன்னும் நான் சொல்கிறேன் சுதந்திரம் என்பது விலைமதிப்பற்றது நீங்கள் ஒரு தேசத்தின் ஜனாதிபதியாக இல்லாமல் தெருவில் புல்லாங்குழல் வாசித்துச் செல்லும் ஒரு பிச்சைக்காரனாக இருக்கலாம்.

ஆனால் நீங்கள் நீங்களாக இருக்கிறீர்கள். அப்படியிருப்பதில் ஒரு ஆழ்ந்த மனநிறைவு திருப்தி ஏற்படும்.

இதை அறிந்து கொள்ளவில்லையெனில் நீங்கள் வாழ்க்கையெனும் ரயிலை தவற விட்டு விட்டவர்களாகி விடுவீர்கள்.

ஓஷோ

கருத்துகள்