மூடுண்ட அறையில் இருந்து பிறக்கும் கதைகளாகிப் போனது சின்ன மகளின் செல்(லா)க்கனவு
அவசரத்தின் அசுரத்தனத்தில் அரைநொடியும் இன்றி அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஆயிரத்தெட்டு வேலை
விலைமதிப்பற்ற செல்வத்தை வெளிச்சத்தில் தொலைத்துவிட்டு இருட்டில் தேடிக்கொண்டிருப்பதில் பயனுண்டோ?
விசித்திரமான வாழ்வின் வடிவங்களை வண்ணமாக்கி அர்த்தப்படுத்தும் உறவுகளை நிராகரித்தால் நிஜங்களும் நிர்மூலமாகாதோ?
நேரசூசிப்படியே வேசமான ஆசை முத்தங்களும் ஆயாவிடமிருந்து அன்றாடம் அன்பளிக்கப்படுகிறது
சின்னமகளின் சித்திர கொப்பிகளில் சின்னக்கனவுகள் மாத்திரமே வண்ணக் குமிழ்களாய் கண்சிமிட்டுகின்றன தூரிகை படாத ஓவியமாக
சிதறும் எனத் தெரிந்ததும் கனவுகள் வளர்க்கப்படும் பொய்மைகளின் தேசத்தில் பொம்மைகளின் உறவோடு சிரிக்கும் சின்னமகள்
நிலாக்கவி நதீரா முபீன், புளிச்சாக்குளம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
கருத்துகள்
கருத்துரையிடுக