விடியலை நோக்கி

சில நொடிகள் மௌனித்துப் பார் இப்பாரினிலே -நீ வசிக்கும் நாட்களை

உதட்டில் தேனாய் சொட்டும் வார்த்தைகள் கண்களில் - அன்போடு கலந்த வஞ்சனை உறவாடுவதில் வெள்ளையனை மிஞ்சிடும் விருந்தோம்பல்

அத்துனையும் - சட்டென கலைந்திடும் பணம் எனும் போர்வை உனை விட்டு விலகையில்

பணத்திற்காக விற்கப்படும் - பாசங்களே இங்கு அதிகம் அதற்காக நீ கால்மார்க்ஸ் - ஆகி வர்க்க முறை பேசி வாதிட வேண்டாம்

காத்திரு நாளைய விடியல் உனக்கானது போராட்டம் நீளட்டும் உன் விடியலை நோக்கி

றஹ்னா பின்த் மகுனதுர் ரஹ்மான் ஹுதாயிய்யா மருதமுனை

கருத்துகள்