அற்புதங்கள் அற்பமானது!

எல்லாம் எல்லோருக்கும் முடிந்துமே எதுவுமே யாருக்குமே முடியவில்லை கோரம் கொரோனா நீ!

உலகமே மருண்டு போனதே வலிகள் தாங்க முடியவில்லை வலிமை கொரோனா நீ!

கண்களில் படாத எச்சமே இனி ஏதுமில்லை மிச்சம் எங்குமே மரண பயம்!

யார் யாருக்கு எமன் இங்கு எதுவுமே புரியவில்லை எங்குமே ஒரே மரணபீதி!

ஜனாஸாக்களின் தீக்கிரையில் நாமும் வெந்து நொந்த வலிகளை சொல்லி அழ வார்த்தைகளில்லை!

கொரோனா, நீதரும் கொடுமைகளை இனியும் ஜீரணிக்க முடியவில்லை! இனியும் எம்மால் முடியவில்லை!

தன்னுயிர் மதியாத தியாகிகளை அவர்களது அயராத அர்ப்பணிப்புகளை பாராட்டாமல் இருக்க முடியவில்லை!

சூழல் மாசினைத் தடுத்தாய்! மசூதிகளை மூடி விட்டாய்! ஆலயங்களை ஓய விட்டாய்! கல்லூரிகளைக் குடைந்து விட்டாய்! வணிகத்திற்கும் ஆப் பிட்டாய்! மிருகங்களுக்குச் சுதந்திரம் செய்தாய்! வீடுகளுக்குள் மானுடத்தை அடைத்தாய்!! உயிர்களைக் கொத்தாகக் குடித்தாய்! எல்லாமே அற்புதமானது முன்பு! இப்போதோ எல்லாமே அற்பமானது!

எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா SLPS 2 பஸ்யால
Advertising that works - yX Media Monetize your website traffic with yX Media

கருத்துகள்