இப்போதெல்லாம் சேனல் மாற்றுவது போல ஆடை மாற்றுவது போல புரொஃபைலில் பிக்சர் மாற்றுவது போல ஒருவரை தம் வாழ்விலிருந்தும் மாற்ற முடியுமென்பது எனக்கு ஆச்சரியமூட்டுகிறது..
ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்குள் நுழைவதைப்போல வெகு சாதாரணமாய் ஒரு உறவிலிருந்து இன்னொரு உறவிற்குள் ஒரு கொள்கையிலிருந்து இன்னொரு கொள்கைக்குள் ஒரு நம்பிக்கையிலிருந்து இன்னொரு நம்பிக்கைக்குள் புக முடியுமென்பது எனக்கு வியப்பூட்டூகிறது..
எத்தனை கோடைகள் எத்தனை மழைக்காலங்கள் எத்தனை அஸ்தமனங்கள் எத்தனை விடியல்கள்
அத்தனையிலும் நான் ஒரே அறையில்தான் வசித்திருந்தேன்.. ஒரே கொள்கையில்தான் நிலைத்திருந்தேன்.. ஒரே நம்பிக்கையைதான் இறுகப்பற்றியிருந்தேன்.. ஒரே கனவைதான் துரத்திக்கொண்டிருந்தேன்.. ஒரே நேசத்தைதான் சுமந்தலைந்தேன்..
இப்போது எல்லாமே அவ்வளவு அந்நியமாய் மாறிவிட்டிருக்கின்றது.. ஒரு தலைமுறைக்கும் இன்னொரு தலைமுறைக்குமான இடைவெளியில்...
எதையோ நான் இங்கு தொலைத்து விட்டேன்.. எதிலோ நான் கொஞ்சம் தொலைந்தும் விட்டேன்!
ரிஸ்கா முக்தார்
கருத்துகள்
கருத்துரையிடுக