பெண்ணின் அடைக்கலம்

அடக்கி ஆள்பவன் அல்ல ஆண் அரவனணப்பவனே ஆண். அடங்காபிடரி அல்ல ஆண் அக்கறை கொள்பவனே ஆண்.

சுயநலவாதி அல்ல ஆண் சொந்தங்களைப் பிரிந்து கஷ்டங்களை ஏற்பவனே ஆண்.

தலைக்கனம் பிடித்தவன் அல்ல ஆண் தனக்கான பெண்ணை தாயைப்போல் மதிப்பவனே ஆண்.

சோம்பேறி அல்ல ஆண் தன்னிலை மறந்து முயற்சிகளின் பின்னால் ஓடுபவனே ஆண்

கோபக்காரன் அல்ல ஆண் அன்பை வெளிப்படுத்த தெரியாதவனே ஆண்.

கொடுமைக்காரன் அல்ல ஆண் குடும்பம் எனும் விருட்சகத்தின் ஆணிவேரே ஆண்.

பொறுப்பற்றவன் அல்ல ஆண் உறவுகளை காக்க ஓயாது உழைப்பவனே ஆண்.

ஆக்கிரமிப்பவன் அல்ல ஆண் பெண்ணின் அடைக்கலமே ஆண்..!

Rushdha Faris, South Eastern University of Sri Lanka

கருத்துகள்