ரமழான் பேசுகிறேன்.

உன்னை நெருங்கி வரப்போகிறேன் என் தவணை ஆரம்பமாக இன்னும் சில தினங்களே இருக்கின்றன.  எல்லாரையும் போல என்னை வரவேற்க வீட்டை சுத்தம் செய்கிறாய், பொருட்களை சேமிக்கிறாய் ஆனால் உள்ளத்தின் அழுக்குகளை கழிவுகளை சுத்தம் செய்ய தயாராக இருக்கிறாயா??

வர காத்திருக்கும் கண்ணயமிக்க என் இரவுகளில் கண்ணீர் சிந்து. தொலைக்காட்சிக்குள்ளேயே தொலைந்துபோய்விடாதே. திக்ர் செய்யக்கூடிய நாவுகளாக உன்னை மாற்றி விடு. தூசி படிய வைத்திருக்கும் நான் சுமந்து வந்த அல்குர்ஆனை திறந்து விடு. ஆன்மாவின் வெற்றிடத்தை நிரப்ப படைத்தவனை நெருங்குவதற்கு அமல்களை பட்டியல் போடு. கஷ்டப்படும் மனிதர்களுக்கு உதவி செய் இது உதவி செய்யும் மாதம்.

ஓ..! இதுவெல்லாம் நான் அறியவில்லை என்று கூறி தப்பிக்க முடியாது. எனக்கு பெற்றோரும், நண்பர்களும் சொல்லித்தரவில்லை என்றும் கூற முடியாது. எதையெல்லாமோ google இல் தேடும் உனக்கு என்னைப் பற்றித் தேட மட்டும் நேரம் கிடைக்கவில்லை என்றும் கூற முடியாது.

எனவே என்னை சிறந்த முறையில் வரவேற்று வழியனுப்பி விடு.

Faslan hashim
yX Media - Monetize your website traffic with us Advertising that works - yX Media

கருத்துகள்