வருக ரமழானே வருக மாசு படிந்திருக்கும் உள்ளங்களில் தூசி துடைத்து செல்ல வருக..
ஈகை குணம் பரப்பி ஈற்று நபி முஹம்மத் நபியின் புகழ் பரப்ப வரும் ரமழானே வருக...
குர்ஆனுக்கு பிறப்புத் தினம் கொடுத்த மேன்மை மிகு ரமழானே விரைந்து வருக....
ஷைத்தானையும் விலங்கில் இட்டு மனித ஷைத்தான்களையும் திருத்த வரும் ரமழானே வேகம் கொண்டு வருக...
பசியையும்,தாகத்தையும் அகிலவாழ் மக்கள் அனைவருக்கும் போதிக்க வரும் ரமழானே சாதனை படைக்க வருக...
ரஹ்மத்துடைய பத்து... மஹ்பிரத்துடைய பத்து... நரக விடுதலையில் இருந்து பாவமீட்சி பெறும் பத்து என... முப்பது முத்துத் தினங்களை கொண்ட ரமழானே வருக...
லைலதுல் கத்ர் இரவின் மகத்துவத்தினால்.... தெளபாவின் கயிற்றில் எங்களை இறுகக் கட்டி விட வரும் மகத்துவம் ஏந்திய ரமழானே நீ மகிழ்ச்சியுடன் வருக...
இஸ்லாத்தில் அடிமைத்துவம் ஒன்றுதான் அது தான் அல்லாஹ்விடம் இதயத்தை சிறை வைப்பது... இந்த ரமழானிலும் அந்த அடிமைகளில் பலர் அணி திரள பார்க்கவிருக்கும் ரமழானே... அல்லாஹ்வின் அருள்களை எல்லாம் ஏந்தி வருக... வருக ரமழானே வருக...
கருத்துகள்
கருத்துரையிடுக