கொரோனா வைரஸும் உலக சனத்தொகையும்

உலக சனத்தொகை தினத்தின் ஆரம்பம்

உலக சனத்தொகை தினம் ஆண்டு தோறும் ஜூலை மாதம் 11ஆம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஐ.நா.மக்கள் தொகை நிதியம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. 1987 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் திகதி உலக மக்கள் தொகை 5 மில்லியனை எட்டியது. மக்கள் தொகை பெருக்கத்தின் அபாயத்தை உணர்ந்த ஐ.நா.சபை 1987 ஆம் ஆண்டு முதல் ஜூலை 11 ஐ உலக சனத்தொகை தினமாக அறிவித்தது. 1989 முதல் இத்தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

தொனிப்பொருள்

இவ்வருட (2020) சனத்தொகை தினத்திற்கான தொனிப்பொருள் 'பெண்கள் மற்றும் சிறுவர்கள் குறித்த விழிப்புணர்வூட்டல்' என்பதாகும்.

கொரோனா வைரஸும் உலக சனத்தொகையும்

பிறப்பு மற்றும் இறப்புக்களின் சமநிலை ஒரு நாட்டின் மக்கள் தொகை ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகும். ஆயினும் கொரோனா வைரஸ் இன்றைய உலக சனத்தொகையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன, மத, வயது வேறுபாடின்றி அனைவரும் இதன் பாதிப்புக்களை அனுபவித்து வருகின்றனர். இதனால் சனத்தொகை அடர்த்தி, நகரமயமாக்கம் மற்றும் ஆயுள் எதிர்பார்ப்பு. போன்றவற்றின் புள்ளிவிபரவியல் போக்குகளும் சடுதியாக மாற்றமடைந்துள்ளதைக் காணலாம். உலகளவில் கொரோனா வைரஸினால் பதிவான இறப்புக்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தையும் தாண்டியுள்ளது. சீனாவின் வுஹானில் ஆரம்பித்த இதன் தாக்கம் இன்றைய உலக சனத்தொகையில் முதியோர்களின் வீதத்தில் சடுதியான சரிவை ஏற்படுத்தியுள்ளது.

"Covid 19 ஆல் சீனாவில் 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரிடையே ஏற்பட்ட இறப்பு விகிதம் அந்த நாட்டிற்கான மொத்த இறப்பு விகிதத்தை விட 6 மடங்கு அதிகமாகும்" என PRB ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சனத்தொகை கணக்கெடுப்பானது மிக முக்கியமானதாக கருதப்படுவதற்கு காரணம் ஒரு நாட்டில் வாழும் சனத்தொகையின் மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டே அந்நாட்டின் அபிவிருத்தி, உற்பத்தி போன்ற துறைகளில் முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சனத்தொகை தினமானது சனத்தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாகக் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இன்று உலகில் சனத்தொகை வரையரையின்றி கூடிச் செலவதாக கூடி குறிப்பாக சீனாவிலும், உலகலாவிய ரீதியிலும் குடும்ப கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது.

ஆனால் உலகலாவிய ரீதியில் சனத்தொகை அதிகரிப்பு அல்ல உண்மையான பிரச்சினை மாறாக உலகலாவிய ரீதியிலும், இலங்கையிலும் சனத்தொகை அடர்த்தியில் உள்ள ஏற்றதாழ்வே தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாகும்.

உதாரணமாக இலங்கையை எடுத்துக் கொண்டால் கொழும்பு, ஹம்பாந்தோட்டை சனத்தொகைக்கு இடையில் மழைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாசமுள்ளது. எனவே சனத்தொகை சமனிலை பேணல் என்று கொழும்பில் குடும்ப கட்டுப்பாட்டை ஊக்குவிக்காமல் கொழும்பில் உள்ள மேலதிகமாக உள்ள சனத்தொகையை ஹம்பாந்தோட்டை போன்ற சனத்தொகை குறைந்த பகுதிகளுக்கு மீள்குடியேற்றி நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் சனத்தொகை அடர்த்தியில் சமனிலை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ASMA MASAHIM PANADURA SEUSL

கருத்துகள்