உதவி செய்யும் போது எல்லார்க்கும் நீ உத்தமன்
ஒரு தடவை மறந்து விட்டால் உனக்குப் பெயர் சுயநலவாதி
மற்றவர் சொல்ல ஆமாம் போட்டால் நீதான் அங்கு தலைவன்
அதை சற்று விசாரித்து நின்றால் நீ அங்கே கொடுங்கோலன்
சிரித்துப்பேசினால் நீ சிறந்தவன் சிந்தித்து சீரியஸாக பேசினால் நீ நேர்சிந்தனை குறைந்தவன்
அழுது பேசினால் நீ ஒரு நடிகன் அவை சிரிக்கப் பேசினால் விகடன்
சிரிப்பில் நடிப்பு இருப்பதை அறியவில்லை, சிந்திப்பில் உண்மை உள்ளதை உணரவில்லை.
உனது ஆயிரம் நலவுகளும் தோற்றுப்போகும், நீ தவறிய ஒற்றைச் செயலினால்
செல்வத்துடன் இருக்கும் போது உன்னைச் சுற்றி ஒரே கூட்டம் தான் செல்வமின்றி நின்று பார், அங்கே தனியே நீ மட்டும் தான்
உனக்காக இருப்பவர்களுக்கு உயிராக இரு, உயிர் கொடுக்க நினைக்கும் உறவாக இரு.
கருத்துகள்
கருத்துரையிடுக