இது என்ன தீடிர் ஆராய்ச்சி

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 16】

சூரியன் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்தது. டோரடோவை அடையப்போகும் ஆனந்தத்தில் கேப்டன் குக் மற்றும் அவரது ஆட்கள் குடித்து கும்மாளம் அடித்து கொண்டு இருந்தனர்.

அதே சமயம் ஆராய்ச்சி கூடத்தில் மற்றும் ஒரு ஆராய்ச்சி திடீரென ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இது பற்றி யாருக்கும் தெரியாது. பரபரப்பாக அவர்கள் வேலை செய்து கொண்டு இருக்கும்போது யுவான் அங்கு வந்தான்.

"என்ன எல்லோரும் ஒரே பம்பரமா சுத்திட்டு இருக்கீங்க?" என்று கேட்டான் யுவான்.

"என்னது உனக்கு விஷயமே தெரியாதா? இப்போ ஓர் ஆராய்ச்சி நடக்க போகிறது." என்றான் அவன்.

"என்ன? ஏன் எனக்கு இன்போர்ம் பண்ணல.. சுபிரீயண்ட் எங்க இப்போ. என்ன ஆராய்ச்சி இது?" எனக்கேள்விகளை அடுக்கி கொண்டே செல்ல மற்றவன்.

"ஓவ் ஓவ் என்னது இது. சில நேரங்களில் இப்படித்தான் நடக்கும். நீ இந்த இடத்துக்கு புதிதாக வந்திருப்பதால் உனக்கு தெரியாது போல. அதுதான் ரெண்டு ஆராய்ச்சி பைலியர் ஆச்சில்லே. அதுதான் சுபிரீயண்ட் திடீரென இதை ஏற்பாடு பண்ணினார்." என்றான்.

"ஓஹ்" என்று அனைத்தையும் உள்வாங்கி கொண்டு.

"நீ வரலியா?"

"இல்ல இதோ ரெஸ்ட் ரூம் போய்ட்டு வந்துர்றேன். நீ போ" என்று அவனை அனுப்பி விட்டு சிந்திக்க ஆரம்பித்தான்.


அதே நேரத்தில் டேஞ்சர் வூட் கப்பலில் கேப்டன் குக் மாரியா இருந்த இடத்துக்கு வந்தான். முழு போதையில்.

"என்னாச்சு! இப்போ புறப்படலாமே. நட்சத்திரங்கள் தெளிவாக தெரிகிறதே!" என்றான்.

"இன்னும் சில நாழிகைகள் பொறுத்திருந்துதான் புறப்பட வேண்டும். கிழக்கில் இருக்கும் அந்த ஓரை சரியான இடத்துக்கு வரும்வரைக்கும் பொறுமையாக இருக்க வேண்டும்." என்றாள்.

அவள் சொன்னது போலவே சரியாக அந்த ஓரை குறிப்பிட்ட இடத்தில் தெளிவாக தெரிய ஆரம்பித்தது.

"நங்கூரத்தை எடுங்க நட்சத்திரம் காட்டும் பாதையில் கப்பலை திருப்புங்க?" என்றாள் மாரியா.

அவள் சொன்னது போலவே மாலுமி கப்பலை ஒரு திசையில் திருப்பினான். அந்த பாதையில் நீண்டு பயணித்தால் டோரடோ தீவை அடைந்து விடலாம் என்று கேப்டன் குக் நம்பிக்கொண்டு இருந்தான். ஆனால் மரியாவை பொறுத்த வரையில் அது அவனையும் அந்த கப்பலையும் காவு கொள்ளப்போகும் திசை.


மறுபுறம் யுவான் திடீரென ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆராய்ச்சி பற்றி எப்படியாவது ஐரிஸுக்கு தெரியப்படுத்த விரும்பினான். ஆனால் அதற்கான மார்க்கம் தான் தெரியவில்லை. இப்போதைக்கு கீழே போனாலோ, ஆராய்ச்சி கூடத்தில் இவன் இல்லாது போனாலோ நிச்சயமாக சுபிரீயண்ட் சந்தேகப்படுவான்.

இரண்டு மீன்களை காப்பாற்றிய மகிழ்ச்சியில் ஐரிஸ் நண்பர்களோடு பேசிக்கொண்டு இருந்தாள். வெளியே கடலில் மீன்களின் மகிழ்ச்சி ஆரவாரம் கேட்டு மூவரும் ஓடிவந்தனர்.

அந்த சுறாமீன் அவளை மகிழ்ச்சிப்படுத்த ஒலி எழுப்பியது. அவளும் வழக்கமாக விளையாடும் பந்து விளையாட்டை ஆரம்பித்தாள். ஆராய்ச்சி கூடத்துக்கு யோசனையுடன் நடந்து கொண்டிருந்த யுவான் இதனை பார்த்தான்.

எப்படியாவது தகவலை அவளுக்கு சொல்லிவிட வேண்டும். யாருக்கும் சந்தேகம் வரவும் கூடாது. என்ன செய்வது என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான். அனைத்தும் ஒரு கடிதத்தில் எழுதி அதை பந்து போல் கசக்கி கையில் வைத்து இருந்தான்.

ஆராய்ச்சி கூடத்தில் இருந்து ஏனையோர் அவனை அழைக்க அதை யாரும் அறியாமல் கீழே வீசிவிட்டான்.

குளிப்பதற்காக சென்ற லில்லி இதனை கண்டுகொண்டாள். ஓடிப்போய் அந்த பேப்பரை எடுத்து விரித்து பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.

"உடனே இதை ஐரிஸ் கிட்ட சொல்லியாகனும்." என்றெண்ணி விரைந்து சென்று அவளிடம் நீட்ட அதை படித்து பார்த்தவள் அதிர்ச்சி அடைந்தாள்.

"என்ன ரெண்டு பேரும் ஷாக் ஆகுறீங்க. இது என்ன லெட்டர் யாரு தந்தது?" என்று கேட்டுக்கொண்டே அவனும் படித்தான்.

"ஐயோ! இப்போ என்ன பண்ணுறது. யுவான் நாம ஏதாவது செய்யணும் என்னு தான் இதை நமக்கு அனுப்பி வெச்சிருக்கான்."

"ஹம் புரியுது. இந்த முறை எந்த மீன் என்னு கூட நமக்கு தெரியாதே."

"ஒரு வழி இருக்கு." என்றாள் ஐரிஸ். என்ன என்பது போல் இருவரும் பார்க்க.

"எந்த மீன் என்னு தானே சிக்கல். எல்லா மீன்களையும் திறந்து விட்டால்." என்றுவிட்டு தன் சுறாமீனை பார்த்தாள். அதுவும் தயாராக இருப்பதாக ஒலி எழுப்பியது.

தொடரும். A.L.F. Sanfara

கருத்துகள்