அவளோடு சில நொடிகள் தொடர் -12
புரியாத புலம்பலோடு ஒரே கோணத்தில் வாழ்க்கையும் சென்று கொண்டிருந்தது. இன்று நாளை என நான்கைந்து நாட்களும் ஓடின.
விடை கிடைக்காத கேள்விகளோடு வெளிச்சதிற்காய் சிறகடிக்கும் விட்டிலாய் பசியாவும் எதையும் ஏற்க மனமில்லாமல் கடந்த கசப்பான நினைவுகளுக்குள் சிக்கித் தவிக்கும் கியாஸும் கணவன் மனைவி என்ற உறவில் இணையாமல் வெறுமனே ஒரு போலியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
காலச்சக்கரம் வேகமாய் நகரக் கூடியது. அன்று வீட்டில் யாரும் இல்லாத தனிமை நஸீஹாவோடு நீண்ட நேரம் பேசக் கிடைத்தது பசியாவிற்கு, மெது மெதுவாக கதையை விட்டாள் பசியா.
"நஸீஹா ஒன்னு கேக்கனும்" தயங்கித் தயங்கி ஆரம்பித்தாள்.
"ஆ கேளுங்களன்"
"நீ நான் கேக்குறதுக்கு எதையும் மறைக்காம உண்மய சொல்லுவியா"
"ஆ கேளுக்களன் பாப்பம்"
"அன்னைக்கு உங்க நானா லவ் பண்ணிருக்காங்கன்னு சொன்னிங்க. அதுக்கு பிறகு என்ன நடந்திச்சின்னு எதுவுமே சொல்லலயே இப்ப சொல்லுவியா?"
"அத நீங்க இன்னும் கியாஸுக்கிட்ட கேக்கலயா?"
"இல்ல நான் அவருகிட்ட கேக்கல. எனக்கு தெரியாத மாதியே இருக்கட்டும்."
"ஓகேய் நானே சொல்றன். நீங்க அவனுக்கிட்ட கேக்க மாட்டிங்களே?"
"இல்ல."
"கியாஸ் அப்ப பேராதனிய யுனிவசிட்டில பைனலியர் படிச்சிட்டு இருந்தான். அப்பதான் அவன்ட வாழ்க்கைல சனா அறிமுகமாவினா. சனாவும் நானும் ஒரே பெச்ல தான் இருந்தம். எல்லாரையும் விட சனா எனக்கு நெருக்கமானவளா இருந்தா. ஒரு வேள கியாஸ்ட லைப்ல அவ வாரதுக்கு நான் கூட காரணமா இருக்கலாம். ஆரம்பத்துல ஒருத்ர ஒருத்தர் பார்த்துக்காம அவங்களுக்குள்ள உருவான புரிந்துணர்வு லவ் வரைக்கும் போகும்னு நான் நினச்சிருக்கல்ல. எல்லாமே இப்பதான் நடந்து முடிஞ்ச மாதி இருக்கு."
"அப்ப ஏன் அவங்க சேரல்ல"
"விதி உங்கள தான் கியாஸ்ட வைபாக்கி இருக்கு. எங்க உம்மாக்கு கியாஸ் லவ் பண்ணினது பிடிக்கல்ல சனாவையுயேய் அவங்களுக்கு பிடிக்கல்ல. ஆனா இவங்கட லவ் வித்தியாசமானதா இருந்திச்சி. அவங்க ஒருத்தரோட ஒருத்தர் அளவுக்கு அதிகமா பேசினது கூட இல்ல. பேரன்ஸ்ட அனுமதிக்காக காத்திருந்தாங்க பிரிஞ்சிட்டாங்க"
"அதுக்கு பிறகு அவரு சனாவ பாக்கவே இல்லயா? சனா கல்யாணம் முடிச்சிட்டாவா."
"இல்ல சனாவ பத்தின தகவல் எதுவுமே தெரியாது. அவ எங்க இருக்கான்னு கூட தெரியாது."
'இத்தன வருசமா சனாவ மறக்காதவரு. மறுபடியும் என்னைக்காவது சனாவ சந்திச்சா என்ட வாழ்க்க?'
பசியாவிற்குள் இன்னும் பல கேள்விகள் உதயமாகின. அவளுடைய முக பாவனை அடியோடு மாறிப் போனது. அது வரை அவளை அவதானித்துக் கொண்டிருந்த நஸீஹா சிரித்துக் கொண்டே,
"மைனி"
அவள் எதையோ கூற வர அதைத் தடுக்கும் படியாக குறுக்கிட்டது தாயின் அழைப்புச் சத்தம்
கருத்துகள்
கருத்துரையிடுக