அவர்கள் ஏன் சிந்திப்பதில்லை

அவர்கள் ஏன் சிந்திப்பதில்லை உலகின் முதல்தர செல்வந்தர்களை வரிசைப்படுத்துகின்றனர் சொத்து மதிப்புக்களை பட்டியலிடுகின்றனர் உலகின் எட்டுத்திக்கும் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கின்றார்கள்

அவர்கள் ஏன் சிந்திப்பதில்லை சொந்தப் பயணத்திற்கு விமானம் வைத்திருக்கிறார்கள் திருமணங்களை சொகுசு கப்பல்களில் நடாத்துகிறார்கள் புதையல் போல ஆடை அணிகலன் வைத்திருக்கின்றார்கள்

அவர்கள் ஏன் சிந்திப்பதில்லை காலையுணவு ஒரு நாட்டிலும் பகலுணவு இன்னொரு நாட்டிலும் எடுத்துக் கொள்கிறார்கள் சற்றே சளி பிடித்தாலும் வீட்டில் மருத்துவர்களை நிறைத்து விடுகிறார்கள்

அவர்கள் ஏன் சிந்திப்பதில்லை வசிப்பதற்கென்று சொர்க்கபுரியே வடிவமைத்துக் கொள்கிறார்கள் நொடிக்கு நொடி உல்லாசமாய் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்

அவர்கள் ஏன் சிந்திப்பதில்லை வீதியோரங்களில் வாழ்க்கை நடத்தும் மனிதர்கள் பற்றி குப்பைத் தொட்டியில் உணவு தேடும் மனிதர்கள் பற்றி நோய்க்கு மருந்தின்றி அநியாயமாக இழக்கப்படும் உயிர்கள் பற்றி மானம் மறைக்க ஆடையில்லா ஜீவன்கள் பற்றி

அவர்கள் ஏன் சிந்திப்பதில்லை குடிக்க ஒரு மிடர் தண்ணீர் கூட இல்லாத இடங்கள் பற்றி படிக்க பாடசாலைகள் இல்லா நிலைபற்றி தெருப்புழுதியில் சுருண்டுபடுக்கும் மனிதர்கள் பற்றி முகாம்களில் வதைபடும் மனிதர்கள் பற்றி எலும்பும் தோலுமாய் நடமாடும் மனிதர்கள் பற்றி இலட்சியங்களை புதைத்து விட்டு இன்னலுறும் மனிதர்கள் பற்றி

அவர்கள் ஏன் சிந்திப்பதில்லை உப்புக் கரிக்கும் துளிகளுடன் தினம் வாழ்பவர்கள் பற்றி உதவிக்கு ஆளின்றி தவிக்கின்றவர்கள் பற்றி சத்திரசிகிச்சைகளுக்காய் பெரும் வரிசையில் காத்திருப்பவர்கள் பற்றி

அவர்கள் ஏன் சிந்திப்பதில்லை என்ற சிந்தனை என்னுள் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றது.

மக்கொனையூராள்

கருத்துகள்