வேதனையுடன் பகிர்கிறேன்.

ராகம வைத்தியசாலை, குருநாகல் வைத்தியசாலை, கராபிடிய வைத்தியசாலை, களுபோவில வைத்தியசாலை, கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலை இன்னும் பல பிரதேச வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றாளர்களுக்கு கட்டில் வசதி விட்டு கதிரை வசதி கூட இல்லை.

நாமோ சிறுபிள்ளைத்தனமாக டொபிக்கும் அங்கர் பால்பக்கட்டுக்கும் மீம் செய்து பதிவிடுகிறோம்.

வேடிக்கை சமூகம். நாடு பூராகவும் பல உயிர்கள் கண்முன் துடிப்பதை கண்டும் காண்களிலும் வீடுகளிலும் சடலமாகவது தெரிந்தும் இன்னும் அற்ப இன்பங்களுக்கு ஆசைப்படும் அலட்சியமான சமூகம்.

இனியாவது சற்று சமூக உணர்வோடு சிந்தியுங்கள். சிந்திக்காவிட்டாலும் பராவாயில்லை. சிறுபிள்ளைத்தனமாக இருக்காதீர்கள்.

பால்பக்கட் வாங்குவது ஒரு புறமிருக்க பட்டினிக்கு பச்சரிசு வாங்க வசதியின்றி உங்களை போன்ற உறவுகள் வடிக்கும் கண்ணீர் ஏன் உங்களுக்கு புரிவதில்லை.

மனசாட்சி இல்லையா மனிதாபிமானம் இல்லையா. வேடிக்கைக்கு ஒரு அளவு வேண்டாமா?

என் சமூகம் அதுவும் படித்த இளைய தலைமுறையினர் இவ்வளவு சுயநலவாத ஏனையவர்களது உணர்வுகளை புரியாத ஒரு சமூகமாக இருக்கும் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

அல்லாஹ் எந்த ஒரு சோதனையை தந்தாலும் அதை வேடிக்கையாக பார்த்தால் அல்லாஹ் பற்றிய அச்சம் எவ்வாறு வரும். இதையெல்லாம் இன்னொருவர் சொல்லி புரிய வைக்கும் நிலை இருக்கும் வரை எம் சமூகம் இன்னும் இன்னும் அடிவாங்க மட்டும் அடக்கப்பட்டு கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். இது சமூக உணர்வு கொண்ட எனது கட்டாய பொறுப்பு.

Faseem Ibnu Rasool

கருத்துகள்