பாடசாலைக் கல்வியை பற்றிப்பிடித்ததெல்லாம் பல்கலைக்கு அடியெடுத்து பசுமைநாட்களை பெற்றுக் கொண்டாடவே
கனவின் மயக்கமோ என கிள்ளிப்பார்க்கத்தோணுமளவு கற்ற கல்விக்காய் கலைப்பீட பட்டமளிப்புவிழா கலையக அங்னியிலே கச்சிதமாய் அரங்கேறியது
காத்திருப்பு கைகூட கனாக்களும் நிறைவேற கொண்டாட்டம்தான் எங்களுக்கு கல்விக்கு முடிசூட்டிய நாள் நமதே
உபகுலபதியாய் ரமீஸ் சேர் இதைத்தாண்டி வேறென்ன இன்பம் எமக்கு உற்சாகம் எம்மில் ஊற அவர்கையால் பட்டங்களை அன்பூறப்பெற்றோம்
புதுமணப்பெண் உட்பட புதுயுகக்கண்கள் பட்டம் பெற வரிசையாய் பாரினில் வலம்வர பெற்றோர்கள் சிறகடித்துப் பறக்கின்றனர் பெருமைகொண்டு நம்மை பெற்ற சந்தோஷத்திலே
நல்ல நட்புக்கள் நாலாபக்க உறவுகள் நல்ல நாளில் சேர்ந்த களிப்பில் எண்ணிலடங்கா புகைப்படங்கள் உணர்ச்சிவசப்படும் நற்பொழுதுகள்
பிரசவ வலியிலும் பிறந்த குழந்தையுடனும் பிறநாட்டிலிருந்து ஓடிவந்து சேர்ந்த பிரமிப்பிலுமென பட்டதாரிகளுக்குப் பின்னால் பலகதைகள் பொக்கிஷமாக
பட்டம் சூட பாவை நான் பரவசம்கொள்ள பெற்றவள் கண்குளிர்ந்த பொன்நாள் இது எனக்கு பல்லாயிரம் நினைவலைகள் பட்டாம்பூச்சியாய் இன்னும் பறந்துகொண்டிருக்கிறது
கருத்துகள்
கருத்துரையிடுக